கவலையில் சுனைனா

காதலில் விழுந்தேன் படத்தின் வெற்றிக்குப்பிறகு பல படங்களில் நடித்தார் சுனைனா. ஆனால் அந்த படங்கள் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை.
இருப்பினும் வம்சம், நீர்ப்பறவை படங்களில் பேசும்படியாக நடித்திருந்தார். அதையடுத்து அவர் ஸ்ரீகாந்துடன் நடித்திருந்த நம்பியார் படத்தை பெரிதாக எதிர்பார்த்தார். அந்த படமும் சுனைனாவுக்கு கைகொடுக்கவில்லை. அதனால் சரியான படவாய்ப்புகள் இல்லாமல் ஐராபாத்துக்கு சென்றுவிட்டார் சுனைனா.

இந்த நேரத்தில்தான் ஜீவா நடித்த கவலை வேண்டாம் படத்தில் இரண்டாவது நாயகி வேடத்துக்கு கமிட்டானார் சுனைனா. அந்த படத்தில் ஜீவா-காஜல்அகர்வால் நடித்தபோதும் தனக்கும் முக்கியமான வேடம் என்று சொன்னதால் கதையைகூட கேட்காமல் நடித்தாராம் சுனைனா. ஆனால் படத்தில் தனது கேரக்டர் டம்மியாக்கப்பட்டிருந்ததைப் பார்த்து ஷாக்காகி விட்டாராம். அதனால் இனிமேல் யாராக இருந்தாலும் கதையை முழுசாக கேட்டு திருப்தியாக இருந்தால மட்டுமே நடிப்பேன் என்று கூறி வருகிறார் சுனைனா.

அதன்காரணமாக கவலை வேண்டாம் படத்திற்கு பிறகு தன்னை படவிசயமாக தொடர்பு கொண்ட சில டைரக்டர்களிடம், முதலில் கதையை சொல்லுங்கள். அதன்பிறகு நடிப்பது பற்றி சொல்கிறேன் என்று கூறியுள்ளார் சுனைனா.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget