அஷ்வினின் அசத்தல் சாதனை

இங்கிலாந்துக்கு எதிரான மும்பை டெஸ்டில் அசத்திய இந்தியாவின் அஷ்வின் 5 விக்கெட் வீழ்த்தி, கபில் சாதனையை சமன் செய்தார்.


இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. நான்காவது டெஸ்ட் மும்பையில் நடக்கிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 288 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்டோக்ஸ் (25), பட்லர் (18) அவுட்டாகாமல் இருந்தனர்.

அஷ்வின் அபாரம்:

இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடக்கிறது. அஷ்வின் 'சுழலில்' ஸ்டோக்ஸ் (31) சிக்கினார். வோக்ஸ் 11 ரன்களில் அவுட்டானார். உணவு இடைவேளைக்குமுன், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 325 ரன்கள் எடுத்திருந்தது. பட்லர் (33), ரஷித் (4) அவுட்டாகாமல் இருந்தனர்.

கபில் சாதனை சமன்:
ஸ்டோக்சை அவுட்டாக்கிய அஷ்வின் முதல் இன்னிங்சில் 5வது விக்கெட்டை கைப்பற்றினார். இதன் மூலம், டெஸ்ட் அரங்கில் ஒரே இன்னிங்சில் அதிக முறை (23) 5 விக்கெட் கைப்பற்றிய மூன்றாவது இந்திய பவுலர் என்ற சாதனையை கபில் தேவுடன் பகிர்ந்து கொண்டார். முதலிரண்டு இடங்களில் கும்ளே (35), ஹர்பஜன் (25) உள்ளனர்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget