சுப்பிரமணியம் சிவா இயக்கிய திருடா திருடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தவர் சாயாசிங்க. "மன்மதராசா...." பாடலில் அவர் போட்ட குத்தாட்டம்
தமிழ்நாட்டையே ஆட வைத்தது. அதன் பிறகு பல படங்களில் நடித்தவருக்கு திடீரென மார்க்கெட் குறைந்தது. கடைசியாக அனந்தபுரத்து வீடு படத்தில் ஹீரேயினாக நடித்தார். சில படங்களில் ஒரு பாட்டுக்கு ஆடினார். சுத்தமாக வாய்ப்புகள் குறைந்ததும் நாகம்மா என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்தார். பின்னர் தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இதற்கு இடையில் பெங்காலி மற்று போஜ்புரி படங்களில் நடித்தவர் ஒரு பெங்காலி படத்தை இயக்கவும் செய்தார். இது கதிர்வேலன் காதல் படத்தில் குணசித்ர நடிகையாக ரீ-என்ட்ரியானார். அதன் பிறகு அவருக்கு குணசித்ர வாய்ப்புகள் அதிகமாக வர ஆரம்பித்திருக்கிறது. தனுஷ் ஹீரோயினாக நடித்தவர் தற்போது அவர் இயக்கத்தில் பவர்பாண்டி படத்தில் நடிக்கிறார். ராஜ்கிரனின் மருமகள் கேரக்டர். இதுதவிர உள்குத்து படத்தில் அட்டகத்தி ரஞ்சித்தின் அக்காவாக நடிக்கிறார். பட்டினப்பாக்கம் படத்தில் சினிமா நடிகையாகவே நடிக்கிறார். இது தவிர ஹீரோயினாக நடித்துள்ள யாத்ரீகன் படம் வெளிவர வேண்டியது இருக்கிறது.
"இப்போதில்லை எப்போதுமே நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்று சொன்னதில்லை. ஹீரோயினாக அறிமுமாகி வளர்ந்து வரும் நிலையிலும் கூட ஒரு பாட்டுக்கு ஆடியிருக்கிறேன். கவுரவ தோற்றத்தில் நடித்திருக்கிறேன். என்னை பொருத்தவரை நடிக்கிற கேரக்டர் எனக்கு பிடிக்க வேண்டும் அவ்வளவுதான். தனுஷ்தான் என் முதல் ஹீரோ அவர் இயக்கும் முதல் படத்திற்கு என்னை அழைத்தது பெருமையான விஷயம். பவர்பாண்டி எனக்கு ஒரு திருப்பத்தை தரும் என்று நம்புகிறேன். பெங்காலியில் படம் இயக்கியது போன்று தமிழிலும் படம் இயக்கும் ஆவலில் இருக்கிறேன். என்கிறார் சாயாசிங்.

கருத்துரையிடுக