கிளாமரா செட்டாகாது அருந்ததி நாயர்

சைத்தான் படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பவர் அருந்ததி நாயர். மலையாளப் படங்களில் நடித்து வரும் அருந்ததி நாயருக்கு தமிழில் இது
இரண்டாவது படம். முதல் படம் விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும். பார்வதி, ஜனனி உள்ளிட்ட சில நடிகைகள் தங்கள் பெயருக்கு பின்னால் உள்ள ஜாதி பெயர்களை அகற்றிவிட்ட நிலையில் அருந்ததி பெயருக்கு பின்னார் நாயர் ஏன் என்பதற்கு அருந்ததி அளித்துள்ள விளக்கம் இது...
கேரளாவில் பெயருக்கு முன்னால் ஊர் பெயரையும், பெயருக்கு பின்னால் ஜாதி பெயரையும் குறிப்பிடுவது வழக்கம். ஆனால் இதை ஜாதியாக யாரும் பார்க்கமாட்டார்கள். இதனை கேரளாவில் ஜாதி அடையாளமாக பார்க்க மாட்டார்கள் குடும்ப அடையாளமாகத்தான் பார்ப்பார்கள். ஆனாலும் எனக்கு ஜாதி பெயரை போட்டுக் கொள்வதில் விருப்பம் இல்லை. கேரளாவில் என்னை தவிர அருந்ததி என்கிற பெயரில் வேறு சில நடிகைகளும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் இருக்கிறார்கள். எனவே என்னை அடையாளப்படுத்திக் கொள்ளத்தான் நாயர் அடைமொழியை சேர்த்திருக்கிறேன்.

சைத்தான் படத்தை அடுத்து 100 டிகிரி செல்ஷியஸ் என்ற மலையாளப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறேன். மேலும் சில கதைகள் கேட்டு வருகிறேன். கிளாமராக நடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன். கிளாமர் பிடிக்காமல் இல்லை. எனக்கு அது செட்டாகாது என்பதால் இந்த முடிவு. தமிழ் ரசிகர்களின் பக்கத்து வீட்டு பெண்ணாக அவர்கள் மனதில் இடம்பிடித்தால் போதும்'' என்கிறார் அருந்ததி நாயர்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget