மாத்தி யோசித்த ஹன்சிகா

ஜெயம் ரவியுடன் போகன் படத்தில் ஹன்சிகா நடித்து வந்தபோது அவரது நடிப்பு குறித்து அந்த படக்குழுவினர் பெருமையாக பேசினர். இந்த
படத்தில் ஹன்சிகாவின் நடிப்பைப்பார்த்து கோலிவுட் டைரக்டர்கள் அவரை முற்றுகையிடுவார்கள் என்றனர். ஆனால், அந்த படத்தில் ஹன்சிகாவின் நடிப்பை டைரக்டர்கள் மத்தியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அதனால், அடுத்தபடியாக தமிழில் படங்கள் இல்லாத நிலைதான் ஏற்பட்டது. அதனால் மலையாள படங்களில் நடிக்க முயற்சி எடுத்து, தற்போது மோகன்லால் நடிக்கும் வில்லன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தமிழில் சசிகுமார் நடிக்கும் கொடிவீரன் மற்றும் விஷ்ணு விஷால் நடிக்கும் படத்தில் ஒப்பந்தமாகியிருக்கும் ஹன்சிகாவை, அடுத்தபடியாக மேலும் சில இரண்டாம் தட்டு ஹீரோக்களின் படங்களும் முற்றுகையிட்டு வருகின்றன. அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தபோதும், இதையும் விட்டால் மார்க்கெட் காலியாகி விடும் என்பதால் இந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார் ஹன்சிகா.

அதாவது சமீபகாலமாக சிறிய ஹீரோக்களின் படமாக இருந்தாலும், தனது கெத்து குறையாமல் வெயிட்டான கதாபாத்திரங்களாக உள்ள கதைகளாக நயன்தாரா செலக்ட் பண்ணி நடித்து வருவது போன்று தானும் மாற முடிவெடுத்துள்ளார் ஹன்சிகா. என்னைச்சுற்றி கதையிருந்தால் ஹீரோ ஒரு விசயமே இல்லை. கதையையே ஹீரோவாக நினைத்து நான் நடிக்கிறேன் என்றபடி கதை கேட்டு வருகிறார். இதனால் ஹன்சிகாவின் மார்க்கெட் மறுபடியும் சூடுபிடிக்கும் நிலை உருவாகியிருக்கிறது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget