அவல் பொங்கல்


இது அவசரத்திற்கு எளிதில் செய்யக்கூடியது.
இதற்கு ஆகும் நேரமும் குறைவு.சுவையோ அதிகம். சத்தானதும்கூட. இதில் நான் வறுத்த அவலை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி ஒன்றும் பாதியுமாக இடித்துப் போட்டுள்ளேன்.அவரவர் விருப்பமாக முழு அவலைப் போட்டும் செய்யலாம்.

தேவையானப் பொருள்கள்:
  • அவல்_ஒரு கப்
  • பச்சைப் பயறு_1/4 கப்
  • வெல்லம்_ஒரு கப்
  • குங்குமப்பூ_சிறிது
  • பால்_1/2  கப்
  • ஏலக்காய்_1
  • நெய்_1/4 கப்
  • முந்திரி_10
  • திராட்சை_10
செய்முறை:

பச்சைப் பருப்பை வெறும் வாணலில் சிவக்க வறுத்துக்கொள்ளவும்.

அதே வாணலில் அவலைப் போட்டு சூடேறும்வரை வறுத்துக்கொள்ளவும்.

பச்சைப் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு அது வேகும் அளவிற்கு தண்ணீர் விட்டு மலர வேக வைக்கவும்.

பருப்பு வெந்ததும் அதில் ஒரு பங்கு அவலுக்கு இரண்டு பங்கு பாலும், தண்ணீருமாகக்  கலந்து ஊற்றி கொதிக்க வைக்கவும்.

கொதி வந்ததும் அவலைக்கொட்டிக் கட்டித்தட்டாமல் நன்றாகக் கிளறி மிகவும் குறைவானத் தீயில் மூடி வேகவைக்கவும்.அவல் சீக்கிரமே வெந்துவிடும்.

சிறிது சூடான பாலில் குங்குமப்பூவைப் போட்டுக் கலக்கி பொங்களில் சேர்த்துவிடவும்.

இதற்கிடையில் ஒரு அடி கனமான பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தைப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அடுப்பிலேற்றி இளம் பாகு பதம் வந்ததும் பொங்கலில் கொட்டிக் கிளறவும்.

ஏலக்காயைத் தட்டிப் போடவும்.

ஒரு வாணலில் நெய் விட்டு முந்திரி,திராட்சை இரண்டையும் பொன்னிறமாக வறுத்து இவற்றை நெய்யுடன் சேர்த்து பொங்கலில் கொட்டிக்கிளறி இறக்கவும்.

சர்க்கரைப் பொங்கலுடன் புளிசாதம், உருளைக் கிழங்கு வறுவல் சேர்த்து சாப்பிட காம்பினேஷன் சூப்பராக இருக்கும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget