மசாலா ரவா தோசை செய்வது எப்படி?


தேவையானவை 
  • 100 கிராம் ரவா 
  • 200 கிராம் பச்சரிசி மாவு 
  • 3 ஸ்பூன் மைதா 
  • 1/2 டம்ளர் தயிர்
  • 2 பச்சை மிளகாய் 
  • 1 பெரிய வெங்காயம் 
  • 1 குடை மிளகாய் 
  • 1/4 ஸ்பூன் கரம் மசாலாத் தூள் 
  • 5 ஸ்பூன் கிரீம்

செய்முறை 
ரவா,பச்சரிசி மாவு,மைதா,தயிர் ஆகியவற்றை ஒன்று சேர்த்து கரைக்கவும்.தேவையான அளவு உப்பு,தண்ணீர் சேர்த்து,அதிகம் கெட்டியாக இல்லாமல் தள தளப்பாக  கரைத்து 1/௨ மணி நேரம் மூடி வைக்கவும்.பச்சை மிளகாய்,பெரிய வெங்காயம்,குடை மிளகாய்,தக்காளி சாஸ்,மிளகாய் தூள்,கிரீம்,பொடியாக நறுக்கிய  மல்லி தழை சிறிது,கறிவேப்பிலை சிறிது ஆகியவற்றை, கரைத்த மாவில் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.தோசை கல்லில் ஊற்றி தோசையாக வார்த்து எடுக்கவும்.சாதாரண தோசைமாவை போல் இல்லாமல்,தண்ணீரை தாராளமாக சேர்த்து ரவா தோசைமாவை கரைத்து கொள்வது முக்கியம்.அப்போதுதான் தோசை மெலிதாக வரும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget