
வட இந்தியாவில் இருந்து கிளம்பி வந்த மருத்துவ தகவல் ஒன்று, தென்னிந்திய பெண்களை ரொம்பவும் குழப்பிவிட்டது. அங்குள்ள பெண் ஒருவருக்கு சரும
புற்றுநோய் ஏற்பட்டது. அவர் புடவை உடுத்தும் பெண். அவரது சருமத்தில் புற்றுநோய் ஏற்பட என்ன காரணம் என்று ஆராய்ந்த டாக்டர்கள், அந்த புற்றுநோய்க்கு ‘வேய்ஸ்ட் கேன்சர்’ என்று பெயரிட்டு புடவையை குற்றவாளிக் கூண்டில் ஏற்றிவிட்டார்கள்.
பத்திரிகைகளில் அந்த செய்தி, ‘புடவை புற்றுநோய்’ என்ற பெயரில் வெளியானது. இது மிகுந்த சலசலப்பை ஏற்படுத்த, மருத்துவ நிபுணர்கள் இதுபற்றி ஆய்வு செய்தார்கள். இறுதியாக, ‘இது சருமத்தில் ஏற்படும் ஒருவகை புற்றுநோய்தான். சம்பந்தப்பட்ட பெண் புடவை கட்டியதற்கும், இந்த புற்றுநோய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்றும் அறிவித்தார்கள்.