
பெற்றோருக்கு தெரியாமல் ரகசியமாக ஓடிப்போய் திருமணம் செய்வது ஒரு பேஷன்போல் ஆகிவிட்டது. அதன் பின்விளைவுகள் தெரியாமல் இளமை வேகத்தில்,
‘அதையும் அனுபவித்து பார்த்துவிடலாமே!’ என்ற எண்ணம் சிலருக்கு ஏற்படத்தான் செய்கிறது.
ஆனால் பெற்று வளர்த்த பெற்றோரை, பிள்ளைகள் பெருமைப்படுத்த வேண்டிய முக்கிய தருணமாக திருமணத்தை சமூகம் பார்க்கிறது. தனது மகனோ, மகளோ தனக்கு தெரியாமல் திருமணம் செய்துகொள்ளும்போது, தமது கவுரவத்திற்குரிய வாய்ப்பு அதன் மூலம் பறிபோகிறது என்று தான் பெரும்பாலான பெற்றோர்கள் கருதுகிறார்கள்.