அவாஸ்ட் ஆண்டி வைரஸ் அப்டேட்

இலவசமாகவும் கட்டணம் செலுத்தியும் கிடைக்கும் அவாஸ்ட் ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்பிற்கு, அண்மையில் குறிப்பிடத்தக்க அப்டேட் ஒன்று
வழங்கப்பட்டுள்ளது. Free Antivirus 2014, Internet Security 2014 மற்றும் Premier 2014 என மூன்றுக்குமாக அப்டேட் கிடைக்கிறது. இந்த அப்டேட் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் பல புதிய அம்சங்களைக் கொண்டுள்ளது.

அவாஸ்ட் இயங்கத் தொடங்கியவுடனேயே, தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் ட்ரைவர் புரோகிராம் ஒன்றும் இயங்குகிறது. இதனால், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை முடக்கும் மால்வேர் புரோகிராம்களால் இதன் இயக்கத்தினை நிறுத்த முடிவதில்லை. இதனுடைய WebShield குறியீடு வரிகள் முழுமையாகப் புதியதாக எழுதப்பட்டுள்ளது. இதனால், கூடுதலான வைரஸ்களை அறியும் திறன் பெற்றுள்ளது. 
லேபிள்கள்:
[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget