
சினிமா டூ சீரியலில் இடம் பெயர்ந்த நடிகைகளின் வரிசையில் லேட்டஸ்ட் உமா. சன் டி.வியில் ‘வள்ளி’ தொடரின் நாயகி. ‘தென்றல்’ உள்ளிட்ட பல தமிழ்
படங்களில் கவனம் ஈர்த்தவர். கல்யாணத்துக்குப் பிறகு காணாமல் போய், ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தனது செகண்ட் இன்னிங்ஸை சின்னத்திரையில் ஆரம்பித்திருக்கிற உமாவின் தோற்றத்தில் கொஞ்சமும் மாற்றமில்லை!
‘‘சினிமா என்னை ஒதுக்கறதுக்கு முன்னாடியே நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டிலாகிட்டேன். ஹஸ்பெண்ட் துஷ்யந்த், ஐடி கம்பெனியில வேலை பார்க்கறார். எங்களுக்கு ஒரே ஒரு பையன் மாத்விக். கல்யாணமான பிறகுகூட வாய்ப்புகள் வந்துட்டுதான் இருந்தது. ஆனா, ஒரு அம்மாவா என் குழந்தைக்கு ஒரு வயசாகிற வரைக்கும், அவன் பக்கத்துல இருந்து என் அருகாமையைக் கொடுக்கற பெரிய பொறுப்பு இருந்தது.