
படங்களைப் பார்த்தால் ஏன் பெண்கள் பயப்படுகிறார்கள் என்று சிந்தித்ததுண்டா? அதற்கு காரணம் பெண்களின் மூளை தான் என்று ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. திகில்
படங்கள் பார்த்தால் பெண்கள் வீல் என்று கத்துவது வழக்கம். பீதியுடன் திகில் படம் பார்க்கும் பெண்கள் அதிகம். திகிலூட்டும் எந்த விஷயத்துக்குமே ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் பயப்படுகிறார்கள்.
இதற்கு என்ன காரணம், பெண்கள் மட்டும் ஏன் பயப்படுகிறார்கள் என்று லண்டனைச் சேர்ந்த யூனிவர்சிட்டி காலேஜின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் சுமார் 30 ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.