எக்ஸெல்லில் பேஜ் பிரேக் கோடு தெரிய வேண்டுமா

computer_tips
செல்களைக் குழுவாகக் கட்டமிட: எக்ஸெல் தொகுப்பில் டேட்டாக்களைக் கொடுத்து பணியாற்றிக் கொண்டிருக்கையில் குறிப்பிட்ட செல்கள ஒரு குரூப்பாகக்
கட்டம் கட்ட வேண்டும் என எண்ணு கிறீர்களா? அப்போது நீங்கள் கட்டமிட விரும்பும் செல்களை ஹைலைட் செய்து தேர்ந்தெடுத்து பின் Ctrl + Shift + அழுத்துங்கள். அழகாகக் கட்டம் கட்டி காணப்படும். அதன்பின் கட்டமிட்ட செல்களில் பார்டரை எப்படி நீக்குவது என யோசிக்கிறீர்களா? முன்பு போலவே கட்டமிட்ட செல்களை ஹைலைட் செய்து தேர்ந்தெடுத்து பின் Ctrl + Shift + _ ஆகிய கீகளை அழுத்தவும். அனைத்து பார்டர்களும் காணாமல் போச்சா!
படுக்கை வரிசை இணைக்க: எக்ஸெல் ஒர்க்ஷீட்டில், புதிய படுக்கை வரிசைகளை குறிப்பிட்ட இடத்தில் இணைக்க நமக்கு வசதிகள் தரப்பட்டுள்ளன. எந்த வரிசையின் கீழாகக் கூடுதல் வரிசை வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுத்து, பின்னர் இன்ஸெர்ட் (Insert) மெனு சென்று, அதில் Rows தேர்ந்தெடுத்து கிளிக் செய்வோம். இதன் மூலம் ஒரே ஒரு வரிசை நமக்குக் கிடைக்கும். 
ஒன்றுக்கு மேற்பட்ட வரிசை வேண்டும் எனில் என்ன செய்கிறோம்? இதற்கு இரண்டு வழிகள் உள்ளன. மேலே கூறியபடி வரிசை ஒன்றை இணைத்த பின்னர், F4 பட்டனை அழுத்தினால், அடுத்தடுத்து வரிசைகள் இணைக்கப்படும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget