பிட்னஸ் ராணி தேவதர்ஷினி

Devadarshini Fitness Tips
குண்டாக இருப்பவர்களைப் பார்த்தால், ‘எந்தக் கடையில அரிசி வாங்கறீங்க?’ எனக் கிண்டலடிப்போம். நடிகை தேவதர்ஷினியைப் பார்த்தால், ‘எந்தக் கடையிலாவது
அரிசி வாங்குவீங்களா?’ என்றே கேட்கத் தோன்றுகிறது. சினிமா, சின்னத்திரை இரண்டிலும் கலக்கிக் கொண்டிருக்கிறவர், தொகுப்பாளராக அறிமுகமானபோது இருந்த அதே ஒல்லிக்குச்சி உடல்வாகை இன்று வரை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்! ‘பயங்கரமா ஒர்க் அவுட்டும் டயட்டும் பண்ணுவீங்களோ?’ என்றால் பெரிதாகச் சிரிக்கிறார்.
‘‘அந்த ரெண்டு நல்ல பழக்கங்களுமே என்கிட்ட கிடையாது. இயல்பிலேயே என் உடல்வாகு இப்படித்தான். வாக்கிங், ஸ்கிப்பிங் மாதிரியான விஷயங்களும் சரி, ஒரு மணி நேரம், ரெண்டு மணி நேரம்னு ஜிம்ல ஒர்க் அவுட் பண்றதும் சரி... எனக்கு எப்போதுமே சரியா வராது. என் அக்கா கார்த்திகேயனி, ஒரு ஃபிட்னஸ் ட்ரெயினர். ‘பிலேட்ஸ்’னு சொல்ற ஜெர்மன் ஸ்டைல் ஃபிட்னஸ்ல அவங்க எக்ஸ்பர்ட். இது பாலிவுட்ல ரொம்பப் பிரபலம். நம்மூர்ல இப்பதான் தெரிய ஆரம்பிச்சிருக்கு.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget