முத்த காட்சியால் முட்டி கொண்ட விஷால்

விஷால் தயாரித்து நடிக்கும் நான் சிகப்பு மனிதன் படத்தை ஃபர்ஸ்ட்காப்பி அடிப்படையில் தயாரித்திருப்பது - யுடிவி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம். அதாவது
இந்நிறுவனத்திடம் குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக் கொண்டு, அதில் தனக்கான லாபத்தொகையை எடுத்துக்கொண்டு மிச்சப் பணத்தில் படத்தை எடுத்து கொடுக்க வேண்டியது விஷாலின் பொறுப்பு.
நான் சிகப்பு மனிதன் படத்தை விளம்பரம் செய்து வெளியிடுவதும், அதன் லாப நஷ்டமும் யுடிவி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தைச் சாரும். இந்த ஒப்பந்தத்தில் தயாரிக்கப்பட்ட நான் சிகப்பு மனிதன் படம் இந்த வாரம் வெளிவர உள்ளநிலையில், விஷாலுக்கும் யுடிவி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும் முட்டிக்கொண்டுவிட்டது.
லட்சுமிமேனன் உடனான லிப்லாக் முத்தக்காட்சியை இழக்கக் கூடாது என்பதற்காக யு சான்றிதழை பறிகொடுத்துவிட்டு யுஏ சான்றிதழ் பெற்றார் விஷால். யு சான்றிதழ் பெற்றால்தான் வரிவிலக்கு கிடைக்கும். யுஏ சான்றிதழுக்கு வரிவிலக்கு கிடையாது. விஷாலின் பிடிவாதத்தினால் 30 சதவிகித வரிச்சுமையை சுமக்க வேண்டியநிலை உருவாகிவிட்டது.
இது தொடர்பான பிரச்சனையில்தான் விஷாலுக்கும் யுடிவி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும் மோதல் எழுந்திருக்கிறது. வரி கட்டுவதால் நஷ்டமாகும் தொகையை நீங்கள்தான் ஏற்க வேண்டும் என்கிறதாம் யுடிவி. இதற்கு விஷால் உடன்படவில்லையாம். சீக்கிரமே இந்த விவகாரம் வெடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget