TNPSC GROUP 2 & 4 - அறிவியல் வினா விடைகள் 2


ஆற்றல் ஓட்டம்:
1. சுற்றுப்புறச் சூழலிலிருந்து ஆற்றலை ஈர்த்து, தன்னுடைய உடற்செயல்களுக்காக அதை
பயன்படுத்துவதால் ஒவ்வொரு உயிரினத்தையும் ஒரு ரசாயன தொழிற்சாலை என்கிறோம்.
2. சூரியசக்தியானது பூமிப்பரப்பை அடைவதற்குள் குறைந்த அலைநீளம் உடைய கதிர்வீச்சுகள் தடுக்கப்படுகின்றன.
3. சூரியசக்தியில் 1 சதவீதம் தான் பூமியின் வளிமண்டல மேற்பரப்பை அடைவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
4. பூமிப்பரப்பில் விழும் பெரும்பான்மையான சூரிய சக்தி, நம் கண்ணுக்கு புலப்படும் சூரிய ஒளிதான்.
5. சூரியக் கதிர்வீச்சு அளவைக் கணக்கிட இயலாது. சுமாராக அது 1372 வாட்ஸ்/மீ இருக்கலாம்.
6. 57 சதவீதம் சூரிய ஒளி வளிமண்டலத்தில் உறிஞ்சப்படுகிறது. 53 சதவீதம் நிலப்பரப்பையும், நீர்ப்பரப்பையும் வெப்பப்படுத்த செலவிடப்படுகிறது. மீதமுள்ள 8 சதவீதம் சூரிய ஒளி ஆற்றலே தாவரங்களை சென்றடைகின்றன.
7. ஒரு சூழ்நிலை மண்டலத்தில் ஆற்றல் ஓட்டமானது ஒரு முகப்பாதையில் செல்லக்கூடிய சுழற்சியற்ற வினையாகும்.
8. உயிரின தொகுப்புகளிடையே காணப்படுகின்ற ஒரு வழிப்போக்கான ஆற்றல் ஓட்டத்தில் வெப்ப இயக்கவியலின் இருவிதிகள் நிரூபணமாகின்றன.
9. வெப்ப இயக்க ஆற்றலின் முதல் விதியின்படி ஆற்றலை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது.
10. உயிர்ப் பொருள்களின் உலர் எடையின் அடிப்படையில் அமையும் கோபுரங்கள் உயிர்ப் புலக் கோபுரங்கள் எனப்படுகின்றன.
11. புல்வெளி மற்றும் காடு போன்ற சூழ்நிலைத் தொகுப்பில் உற்பத்தியாளர்கள் மட்டத்திலிருந்து உயிர் நுகர்வோர் மட்டம் நோக்கிச் செல்லச் செல்ல உயிர்ப்புலம் படிப்படியாகக் குறையும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget