TNPSC GROUP 2 & 4 - அறிவியல் வினா விடைகள் 1


மீன் வளப் பொருள்களின் முக்கியத்துவம்:
1. புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருள்கள் நிறைந்த பழமையான ஒரு
உணவு மீன் ஆகும்.
2. வயிற்றுப்புண் மற்றும் சீரணக் கோளாறு உள்ளவர்களுக்கு சிறப்பு உணவோடு மீனும் சேர்த்து தரப்படுகிறது.
3. மீன் உணவின் தனிப்பட்ட வேதித்தன்மையினால் இருதய நோயாளிக்கு மீன் உணவு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
4. வைட்டமின் - கண் பார்வைக்கு உதவி புரிகிறது. பையோட்டின், நியாசின் மற்றும் பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு போன்ற தாதுப்பொருள்கள் மனிதனின் இயல்பான உடல் வளர்ச்சிக்கு உதவி செய்கிறது.
5. மீனில் உள்ள புளூரைடு எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கிறது.
6. சார்டைன்ஸ், ஹெரிங்க்ஸ் மற்றும் சால்மன் போன்றவற்றின் எண்ணெய்கள், சோப்பு மற்றும் வர்ணம் தயாரிப்பதில் பயன்படுகிறது.
7. மீனின் உண்ண முடியாத பாகங்களில் இருந்து கால்நடை, கோழி, வாத்து போன்றவைகளுக்கு உணவு தயாரிக்கப்படுகிறது.
8. மீன்களின் கழிவுகளில் இருந்து உரங்களும் பசை பொருள்களும் தயாரிக்கப்படுகின்றன.
9. சுறா மீனின் தோலில் இருந்து காலணிகள், கைப்பைகள் போன்றவைகள் தயாரிக்கப்படுகின்றன.


10. இந்தியாவில் இறால் வளர்ப்பு மிக முக்கியான தொழிலாக மேற்கொள்ளப்படுகிறது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget