TNPSC GROUP 2 & 4 - அறிவியல் வினா விடைகள்


1. இறால் வளர்ப்பில் உலக நாடுகளுள் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. இரண்டாவது இடத்தில்
இந்தியா உள்ளது.
2. இயற்கையான நீர்நிலைகளில் உள்ள இறால் குஞ்சுகளை வலையின் மூலம் பிடித்து, வளர்க்கும் குளங்களில் விடுதல் வழக்கமான இறால் வளர்ப்பு முறையாகும்.
3. வளர்க்கக் கூடிய இறால்களின் உதாரணங்கள்: பினோயஸ் இன்டிகஸ் மற்றும் பினேயஸ் மோனோடான்.
4. ஆல்காக்கள் உயிரியல் உரமாக பயன்படுத்தப்படுகின்றன.
5. ஸ்பிருலினா என்ற நீலப்பச்சை பாசி மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் 1983 முதல் வளர்க்கப்படுகின்றது.
6. மண்புழு வளர்ப்பு வெர்மிகல்சர் என்று அழைக்கப்படுகிறது.
7. மண்புழுக்கள், மண் அமைப்பில் முக்கிய பங்கு பெறுகின்றன. அவை நிலத்தை சத்தமின்றி உழுது கரிமச் சத்துப் பொருள்களை மீண்டும் சுழலச் செய்ய உதவுகிறது. இவ்வாறு உருவாக்கப்பட்ட உரம் தாவரங்களில் சிறப்பான வளர்ச்சிக்கு உதவுகிறது.
8. மண்புழுக்கள் உற்பத்தி செய்த உரம் வெர்மி கம்போஸ்ட் என்று அழைக்கப்படுகிறது.
9. கரிம கழிவுகள் மற்றும் பயிர் கழிவுகளை மண்புழுக்கள் உரமாக மாற்றும் செயல் வெர்மிகம்போஸ்டிங் என்று அழைக்கப்படுகிறது.
10. எண்டேஜெயிக்ஸ் - இவை மண் உண்ணிகள். இவை உண்ணுகின்றன. இவை படுக்கைவாட்டில் வளை அதிக கரிமப் பொருட்கள் கொண்ட மண்ணை செய்கின்றன. என்டேஜெயிக் மண்புழுவிற்கு எடுத்துக்காட்டு ஆக்டோகிட்டோனா தரஸ்டோனி ஆகும்.


11. பண்ணை விலங்குகளில் முட்டைகளின் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சி வெள்ளிப்புரட்சி எனப்படும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget