
1) நகையும் உவகையும் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
A. உம்மைத் தொகை
B. இழிவு சிறப்பும்மை
C. எண்ணும்மை
D. வினைத்தொகை
Answer : C.
2) கொழு கொம்பற்ற கோடி போல - உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.
A. ஆதரவு
B. தாவுதல்
C. ஆதரவின்மை
D. அசைதல்
Answer : C.
3) தே - என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
A. தேம்புதல்
B. தேடுதல்
C. இறைவன்
D. அரசன்
Answer : C.
4) அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.
A. நொறுங்கு, பண்ணை, பனி, நரை
B. நரை, பனி, நொறுங்கு, பண்ணை
C. நரை, நொறுங்கு, பண்ணை, பனி
D. பனி, நரை, நொறுங்கு, பண்ணை
Answer : C.
5) எதிர்ச்சொல் தருக : அகலாது
A. மறையாது
B. விலகாது
C. அணுகாது
D. பிறழாது
Answer : C.
6) பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
A. வெட்சித்திணை
B. வஞ்சித்திணை
C. தும்பைத்திணை
D. குறிஞ்சித்திணை
Answer : D.
7) ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: மருப்பு - மறுப்பு
A. தந்தம் - எதிர்ப்பு
B. சேவல் - குறைப்பு
C. மன்னன் - உறக்கம்
D. குதிரை - நீக்கம்
Answer : A.
8) ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: கலை - களை
A. ஆண்மான் - அகற்று
B. ஆடல் - வண்ணம்
C. பாடல் - ஓசை
D. வெளிச்சம் - இருள்
Answer : A.
9) எந்தை - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
A. வினைச்சொல்
B. மரூஉச்சொல்
C. பெயர்ச்சொல்
D. உரிச்சொல்
Answer : B.
10) பிரித்து எழுதுக :அரும்பொருள்
A. அருமை + பொருள்
B. அரும் + பொருள்
C. அரு + பொருள்
D. அ + பொருள்
Answer : A.
கருத்துரையிடுக