பெண்கள் பஸ்ஸில் செல்லும் போது கவனமாக இருப்பது எப்படி

பெண்கள் தனியாக பயணம் மேற்கொள்ளும் பெண்கள் பலவித பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. கொலைகள், கற்பழிப்புகள்
மற்றும் ஜாடை மாடையாக கேலிசெய்வது போன்ற தொந்தரவுகள், ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்யும் போது, குறிப்பாக தனியாக பயணிக்கும்போது, சர்வ சாதாரணமாக நிகழ்கின்றன. 

இது போன்ற சூழல்களில், பெண்கள் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதில் அதிக கவனத்தோடும் விழிப்புணர்வோடும் பயணிப்பது மிக முக்கியம். தனியாக பெண்கள் பயணம் செய்வது என்பது பிரம்மப் பிரயத்தனமான செயலாகவே உள்ளது. 

பெண்களை விழுங்குவது போன்று பார்ப்பதில், அலாதி அல்ப சுகம்காணும் ஆண்களின் அலைபாயும் கண்களிலிருந்து பெண்கள் தப்பவே முடியாது. பெண்கள், இன்னும் சமூக கட்டுப்பாடுகள் மற்றும் பழமைவாதம் நிலவும் ஒரு நாட்டில் தான் வாழ்கிறோம் என்பதை மறக்கக் கூடாது. 

இதுபோன்ற ஒரு சமூக க்கட்டமைப்பில், பெண்கள் தாங்கள் எவ்வாறு வெளியிடங்களில் நடந்து கொள்ள வேண்டும் என்பதை தெளிவாகக் கற்றுக் கொள்ள வேண்டும். மேலும் கலாச்சாரப் பெருமைக்கு இழுக்கு உண்டாக்காமல் இருக்கவும், தனியாக பயணிக்கும் போது ஏதாவது பிரச்சனை வந்தால் தன்னை பாதுகாத்து கொள்ள முன்னெச்சரிக்கை வழிமுறைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். 

என்னமாதிரி உடைகளை அணிகிறோமோ, அதைப்பொறுத்து தான் கவன ஈர்ப்பின் தன்மை உள்ளது. அதிலும் உடலை இறுக்கிப் பிடிக்கும் உடைகள் மற்றும் குட்டைப் பாவாடைகள் போன்ற உடைகள் அணிவதைத் தவிர்ப்பதன் மூலம், பெண்கள் தங்கள் மேல் விழும் அந்நியர்களின் தேவையில்லாத பார்வைகளைத் தவிர்க்கலாம். 

எப்போதும் சுடிதார் அணிந்து, அதற்கு மேல் துப்பட்டா அல்லது ஷால் அணிவதை வழக்கமாக கொள்ள வேண்டும். வேண்டுமெனில் ஜீன்ஸ் மற்றும் குர்தாகூட அணியலாம், ஆனால் எப்போதும் ஷால் ஒன்றை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget