மனதை வருடும் கலக்கல் ஹேர் கலரிங்

கூந்தல் கறுப்பு என்பதெல்லாம் அந்தக்காலம். இப்போது விதவிதமான ஹேர் கலரிங் தயாரிக்கின்றனர். ஹேர் கலரிங்கில் டெம்ப்ரரி
ஹேர் கலர் என்பது இன்ஸ்டண்ட் காபி மாதிரி! 

பார்ட்டிக்கு அவசரமாய் புறப்பட போகும் போது இந்த வித ஹேர் கலரிங், சட்டென கை கொடுக்கும். இதைப் போட்டுக் கொண்டு பார்ட்டிக்குப் போய் விடலாம். வந்ததும் ஷாம்பு போட்டு குளித்து விட்டால் நிறம் மறைந்து விடும். பேன்ஸி கலரிங் விதம் விதமாய் கிடைக்கும். 

செமி டெம்ப்ரவரி ஹேர் கலரிங்கில் கூந்தல் பாதிக்கப்படாது. ஆனால் உடனே நிறம் மறையாது. சில நாட்கள் கழித்து அதிகம் ஷாம்பூ உபயோகப்படுத்த ஆரம்பித்த பிறகே மறையும். பெர்மனன்ட் ஹேர் கலரிங்கில் நீங்கள் விரும்பும் வண்ணம் உங்கள் கூந்தலில் நிரந்தரமாய் தங்கி விடும்.. 

இதைப் பல பெண்கள் விரும்புவதில்லை ஏனெனில் அடிக்கடி கூந்தலின் நிறத்தை மாற்ற இது சரி வராது என்பதால். கலரிங் அதிக நாள் நிலைத்து நிற்கவும் பளபளப்பாய் மின்னவும் நல்ல தரமான ஷாம்பூக்களையும் நல்ல கன்டிஷனர்களையும் உபயோகப்படுத்த வேண்டும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget