நோக்கியா எக்ஸ் அதிரடி விலை குறைப்பு

மார்ச் மாதம், நோக்கியா நிறுவனம் தன் நோக்கியா எக்ஸ் மாடல் மொபைல் போனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. தற்போது
அதன் விலையை ரூ.7,027 ஆகக் குறைத்துள்ளது. அறிமுகப்படுத்திய போது இதன் விலை ரூ.8,599 எனக் குறிக்கப்பட்டது. நோக்கியா நிறுவனம் வழங்கிய, ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் முதல் ஆண்ட்ராய்ட் போன் இதுவாகும். 4 அங்குல டச் ஸ்கிரீன் வண்ணத்திரை, 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் குவால்காம் ஸ்நாப் ட்ரேகன் ப்ராசசர் ஆகியன இதில் தரப்பட்டுள்ளன. இதன் பரிமாணம் 115.5 x 63 x 10.44 மிமீ. எடை 128.6 கிராம். 3 எம்.பி. திறன் கொண்ட பின்புறக் கேமரா, 3.5 மிமீ ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, 512 ராம் மெமரி, 4 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி, நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, புளுடூத் 3.0, ஜி.பி.எஸ். ஆகியவை இயங்குகின்றன. இதன் பேட்டரி 1,500mAh திறன் கொண்டது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget