எக்ஸெல்லில் இரட்டைப்படை இலக்கங்கள்

புள்ளிவிபரங்களைக் கொண்டு ஆய்வு செய்திடும் ஒருவர், எக்ஸெல் ஒர்க்புக்கில், தன் கணக்கில் கிடைக்கும் முடிவு எண்களை அருகே உள்ள
இரட்டைப்படை இலக்கத்திற்குக் கொண்டு செல்ல ஏதேனும் வழி உள்ளதா எனக் கேட்டார். இதனைச் சற்று விரிவாக இங்கு காணலாம். 

இதற்குப் பல வழிகள் உள்ளன.  இரட்டைப்படை எண் என்று எண்ணுகிறேன். ஏனென்றால், அருகே உள்ள இரட்டைப்படை எண் என்றால், 13க்கு அருகே 12 மற்றும் 14 உள்ளன. அதே போல மைனஸ் எண் மாற்றும்போது என்ன ஏற்படும்?

நாம் விரும்பும் இரட்டைப்படை எண் 0 இல்லாத ஒன்றாக இருக்க வேண்டும் என எண்ணினால், EVEN செயல்பாட்டினை மேற்கொள்ளலாம். இது -13 ஐ -14 ஆக மாற்றும். ஆனால், இந்த செயல்பாடு 12 ஐ 12 ஆகவும், 12.1 ஐ 14 ஆகவும் மாற்றும். இது சரியா? ஏனென்றால், 12.1 என்பதன் அருகே உள்ள இரட்டைப் படை எண் 12 தான், 14 அல்ல. நீங்கள் மாற்றி அமைக்கும் எண் முழு எண்ணாக இல்லை என்றால், =INT(A2/2+0.5)*2 என்ற பார்முலாவினைப் பயன்படுத்தலாம். மாற்றப்பட வேண்டிய எண் செல் A2 வில் இருக்கும் என்ற அடிப்படையில் எழுதப்பட்ட பார்முலா இது. இந்த பார்முலா, அந்த எண்ணை இரண்டால் வகுத்து, பின்னர் கிடைக்கும் மதிப்பினை ஒரு முழு எண்ணுக்கு மாற்றி, அதன் பின் அதனை 2 ஆல் பெருக்குகிறது. இதன் பொருள் என்னவென்றால், 11.1 முதல் 13 வரை எண்கள் கொடுத்தால், அது இரட்டைப்படை எண் 12 ஐக் கொடுக்கும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget