மின் அஞ்சல் பற்றி நாம் அறியா தகவல்கள்

Pinned: பின் செய்யப்பட்ட அல்லது குத்தி வைக்கப்பட்ட என்ற பொருளைக் கொண்ட இந்த சொல், விண்டோஸ் சிஸ்டத்தில், நாம் அடிக்கடி
பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களை, உடனடியாக எடுத்துப் பயன்படுத்தும் வகையில் அமைப்பதனைக் குறிக்கிறது. அப்ளிகேஷன்கள் மட்டுமின்றி, புரோகிராம்கள், இணைய தளங்களுக்கான லிங்க் என எதனையும் பின் செய்து வைக்கலாம். இவற்றை ஒரு மெனுவில் வைத்து, நாம் விரும்பும்போது இயக்கலாம். எடுத்துக்காட்டாக, விண்டோஸ் விஸ்டா ஸ்டார்ட் மெனு, இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேலாக உள்ள பாதிப் பிரிவு, இது போன்ற பின் செய்யப்படும் புரோகிராம்களுக்கானது. எந்த புரோகிராம்களை எல்லாம் நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோமோ, அவற்றை இதில் பதிந்து வைக்கலாம்.

Email harvesting: டிஜிட்டல் உலகத்தில், ஏற்றுக் கொள்ளப்படாத தவறான செயல்பாடு. மின் அஞ்சல் முகவரிகளை மொத்தமாகத் திருடுவதற்கு ஒப்பானது. இவற்றைக் கட்டணம் செலுத்தி வாங்குவதற்குப் பல வர்த்தகர்கள் உள்ளனர். பெரும்பாலும் ஸ்பாம் மெயில்களை அனுப்ப, இத்தகைய மின் அஞ்சல் பொதிகளைப் பயன்படுத்துவார்கள். போட்டிகளை நடத்தும் இணைய தளங்கள், ஏதேனும் ஒரு கவர்ச்சிகரமான திட்டத்தினைக் கூறி மின் அஞ்சல் முகவரிகளைப் பெறும் இணைய தளங்கள், அந்த வகையில் தாங்கள் பெறும் மின் அஞ்சல் முகவரிகளைத் தனியார் நிறுவனங்களுக்கு விற்றுவிடுகின்றனர்.

அமெரிக்காவில் 2003 ஆம் ஆண்டு CANSPAM Act என்ற சட்டத்தின் கீழ் இது தடை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மின் அஞ்சல் முகவரியையும், அதற்கு உரியவரின் அனுமதி பெற்ற பிறகே, வேறு ஒருவர் அல்லது நிறுவனம் அல்லது இணைய தளம் பெற வேண்டும் என இந்தச் சட்டம் கட்டாயமாக்கியுள்ளது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget