4ஜி இணைப்பை வழங்கும் ஏர்செல்

ஏர்செல் நிறுவனம் ஆந்திர பிரதேசம், அஸ்ஸாம், பீஹார் மற்றும் ஒடிஷா மாநிலங்களில் புதியதாக 4ஜி மொபைல் சேவையை
அறிமுகப்படுத்தியுள்ளது. மலேசியா மேக்ஸிஸ் நிறுவனமும் உரிமை கொண்டுள்ள ஏர்செல் ஏற்கனவே தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் இந்த சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது மொத்தம் எட்டு மாநிலங்களில் 4 ஜி சேவையை வழங்குகிறது. இந்த தகவலை வெளியிட்ட இந்நிறுவனம், 4ஜி அடிப்படையில் வழங்கப்படும் அதிக பட்ச மற்றும் குறைந்த பட்ச இணைப்பு வேகம் என்னவாக இருக்கும் என்றோ, சேவைத் திட்டங்கள் மற்றும் அதற்கான கட்டணம் குறித்தோ எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை. 

தான் ஏற்கனவே அனுமதி பெற்று பிராட்பேண்ட் வயர்லெஸ் சேவை வழங்கும் மண்டலங்களில், பாதி இடங்களில், இந்த 4ஜி சேவையை ஏர்செல் வழங்குகிறது. இந்தியாவில், பார்தி ஏர்டெல் தான் முதன் முதலில் 4ஜி சேவையை (TD-LTE technology) கொல்கத்தா, பெங்களூரு, புனே மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் வழங்கியது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த சேவையை ஆப்பிள் மற்றும் குறிபிட்ட எல்.ஜி. ஸ்மார்ட் போன்கள் வழியாக மட்டுமே முதலில் பாரதி ஏர்டெல் தொடங்கியது. ஆனால், ஏர்செல் உரிமம் பெற்றுள்ள மண்டலங்களில், பார்தி ஏர்டெல் உரிமம் பெறவில்லை என்பதனையும் நினைவில் கொள்ளலாம். 4ஜி சேவையை வழங்குவதன் மூலம், அதிவேக இணைப்பில் டேட்டா பரிமாறிக் கொள்ள விரும்பும் பயனாளர்களின் தேவையை ஏர்செல் நிறைவேற்ற உள்ளது. 
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget