பேஷன் ஷோக்களில் அசத்தும் நடிகைகள்

இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்று யானையைப் பற்றி சொல்வார்கள். இது நடிகைகளுக்கும் பொருந்தும். அதாவது
நடிகைகளுக்கு மார்க்கெட் இருந்தாலும் வருமானம், இல்லாவிட்டாலும் வருமானம். பட வாய்ப்பு இருக்கும்போது நடித்து சம்பாதிக்கும் நடிகைகள் பட வாய்ப்பு குறைய ஆரம்பித்த பிறகு கடைத்திறப்பு விழாக்கள், டிவி ஷோ என்று கலந்து கொண்டு பெரிய தொகையை பில் போடுகிறார்கள். அது மட்டுமல்ல, அழகிப்போட்டிகளில் கேட்வாக் நடந்தும் சம்பாதிக்கிறார்கள்.

சென்னை போன்ற பெரு நகரங்களில் அழகிப்போட்டிகள், ஃபேஷன் ஷோக்கள் அடிக்கடி நடக்கின்றன. இந்த ஷோக்களில் அழகிகள் அணி வகுக்கும் கேட் வாக் நிகழ்ச்சியில் மாடல்கள் மட்டும் கலந்து கொண்டால் வரவேற்பு அவ்வளவாக இருப்பதில்லை. கூட்டத்தை கூட்டுவதற்கு நடிகைகளை அழைக்கிறார்கள். அப்படி அழைக்கப்படும் நடிகை கேட் வாக் செய்யும்போது அந்த ஃபேஷன்ஷோவுக்கு ஸ்பான்சர் நிறைய கிடைக்கிறதாம். எனவே நடிகைகளை அழைக்கிறார்கள். ஆண்டரியா, தன்சிகா போன்ற நடிகைகள் இந்த ஷோக்களில் கலந்து கொண்டு கேட் வாக் நடந்து செமத்தியாய் கேஷ் பார்க்கிறார்கள். இதில் வேடிக்கை என்ன தெரியுமா? அண்மையில் தி.மு.க.வில் இருந்து விலகிய குஷ்பூ சமீபத்தில் நடந்த ஒரு ஃபேஷன்ஷோவில் கலந்து கொண்டு கேட் வாக்கினார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget