சத்தான உணவு அறிவது எப்படி

சத்தான உணவு இல்லாததால் ஒல்லியான தேகத்துடன் காணப்படுவோரையும், அளவுக்கு அதிகமாக சத்தான உணவுகளை சாப்பிட்டு
குண்டாக இருப்போரையும் அழகானவர்கள் என்று சொல்லி விட முடியாது. இந்தியாவை பொறுத்தவரை வளர் இளம்பெண்கள் அதிக அளவில் சத்துக் குறைபாட்டுக்கு ஆளாகிறார்கள். 

வளர் இளம் பெண்கள் எடையை குறைப்பதை பற்றியே கவலைப்படுவதால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. எடுத்துக்கொள்ள வேண்டிய சராசரி உணவின் அளவைவிட குறைவான அளவில் உணவை எடுத்துக்கொண்டால் இரும்புச்சத்து, கால்சியம் சத்து குறைபாடு ஏற்படும். அதாவது, மாதவிலக்கு சமயத்தில் இரும்புச்சத்தின் தேவை இரட்டிப்பாக உயரும். 

கால்சியம் சத்து குறைபாடு ஏற்பட்டால் வாழ்வின் பிற்பகுதியில் எலும்பானது வலிமை குறைந்துபோகும். அது, உடலின் எடையை தாங்க முடியாமல் பிரச்சினை ஏற்படலாம். சாப்பாட்டை குறிப்பாக, காலை உணவை தவிர்ப்பது, நொறுக்குத் தீனிகள், இனிப்புகளை அதிகம் சாப்பிடுவது, சாப்பிடத் தயார் நிலையில் விற்கப்படும் உணவுகளை அதிகம் 

சாப்பிடுவது மற்றும் அதை வேகமாக சாப்பிடுவது, குடும்பத்தில் மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளாத, வழக்கத்துக்கு மாறான கலப்பில் உணவு சாப்பிடுவது, உணவு வகைகள் மீது விருப்பு-வெறுப்பு காட்டுதல், 

பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்களை அதிக அளவில் குடிப்பது, மது அருந்துதல் ஆகியவை அந்த பழக்க வழக்கங்களில் இடம் பெறுகின்றன. அதனால், வளர் இளம்பெண்கள் சத்தான உணவுகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்பது சத்துணவு நிபுணர்களின் கருத்து. 

* அந்த வளர் இளம் பருவ வயதில் ஏற்படும் வேகமான வளர்ச்சிக்கு தேவையான சத்து கிடைக்கும் வகையில் உணவு வகைகளை மாற்றி உட்கொள்ள வேண்டும். 

* பூப்பெய்தும் காலத்தை கணிப்பது மற்றும் கருத்தடை மருந்து பயன்படுத்துவது பற்றிய விவரங்களை கேட்டறிந்து, அதற்கேற்ற உணவு வகைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். 

* இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் அதை சரி செய்ய வேண்டும். அதை வராமலும் தடுக்க வேண்டும். 

* உடல் எடை கூடுகிறதா? அல்லது குறைகிறதா? என்பதை அடிக்கடி கண்காணிக்க வேண்டும். 

* தினமும் சராசரியாக 2 ஆயிரம் முதல் 2,500 கிலோ கலோரி வரையில் சத்து கிடைக்கும் வகையில் உணவு வகைகளை அவர்களுக்கு பரிந்துரைக்க வேண்டும். 

10 முதல் 12 வயதின் முற்பகுதியில் உள்ள வளர் இளம் பெண்கள் தினமும் 260 முதல் 320 கிராம் வரையிலும், 13 முதல் 15 வயது வரையில் உள்ளவர்கள் மற்றும் 16 முதல் 18 வயதின் பிற்பகுதியில் உள்ளவர்கள் தினமும் 290 முதல் 350 கிராம் வரையிலும் தானியங்கள், தினை, சாமை உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 

புரோட்டின் நிறைந்த பயறுகள், பயறு காய்கள், அவரை வகைகளை 10 முதல் 12 வயதின் முற்பகுதியில் உள்ள வளர் இளம்பெண்கள் தினமும் 30 முதல் 70 கிராம் வரையும், 13 முதல் 18 வயது வரையில் உள்ளவர்கள் தினமும் 50 முதல் 70 கிராம் வரையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

புரோட்டினுக்கு மாற்று உணவாக அசைவத்தில் கறி, மீன் மற்றும் முட்டை – இவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 30 முதல் 60 கிராம் வரை எடுத்துக்கொள்ள வேண்டும். சைவ உணவு மட்டுமே உட்கொள்பவர்கள் அதற்கு பதிலாக, முந்திரி போன்ற கொட்டை வகைகள் மற்றும் நிலக்கடலை போன்ற எண்ணெய் வித்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 

இவற்றை 30 முதல் 50 கிராம் வரை சேர்த்துக்கொள்ள வேண்டும். பால் மற்றும் பால் பொருட்களும் புரோட்டின் கிடைக்க உதவும். இந்த உணவு முறையை வளர் இளம் பெண்கள் பின்பற்றினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அழகாகவும் ஜொலிக்கலாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget