சரும பதிப்புகள் பற்றி அறிய வேண்டுமா

சருமத்தை வெள்ளையாக்குவதாக கூறும் ஃபேர்னஸ் கிரீம்களை வாங்கி தொடர்ச்சியாக பயன்படுத்துவதால், சருமம் அதன்
ஆரோக்கியத்தை இழந்து விடும். ஃபேர்னஸ் கிரீம் பயன்படுத்த நினைத்தால், அதனை பயன்படுத்துவது ஆரோக்கியமானதா என்பதை தெரிந்து கொண்டு பின் பயன்படுத்துங்கள். 

இங்கு கண்ட கண்ட ஃபேர்னஸ் கிரீம் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகளை பார்க்கலாம்.. ஒரு சில ஃபேர்னஸ் கிரீம் மூலம் சிலருக்கு சருமத்தில் அரிப்புக்கள் ஏற்பட ஆரம்பிக்கும். அதிலும் க்ரீம் பயன்படுத்திய சில நொடிகளிலேயே அரிப்புக்களானது ஏற்படும். 

எனவே எந்த ஒரு ஃபேர்னஸ் க்ரீமை பயன்படுத்தும் போதும் அரிப்பு ஏற்பட்டால், உடனே குளிர்ச்சியான நீரினால் சருமத்தை கழுவி விடுங்கள். க்ரீம்களை பயன்படுத்தும் முன்னர், நன்கு பரிசோதனை செய்துவிட்டு, பின் பயன்படுத்த வேண்டும். 

ஃபேர்னஸ் கிரீம்களில் ஒன்றுக்கு மேற்பட்ட கெமிக்கல்கள் கலந்திருப்பதால், அதனை பயன்படுத்தினால் சரும எரிச்சல், சருமம் சிவப்பாக மாறுவது, அரிப்பு என்று ஏற்படக்கூடும். தொடர்ச்சியான ஃபேர்னஸ் கிரீம் பயன்படுத்தி வந்தால், சரும புற்றுநோய் வரவும் வாய்ப்புள்ளது. 

ஏனெனில் க்ரீம்களில் பயன்படுத்தும் சில கெமிக்கல்கள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவாறு இருக்கும். எனவே க்ரீம்களை வாங்கும் முன், அதில் ஹைடட்ரோகுவினைன், மெர்குரி அல்லது ஸ்டெராய்டு இல்லாததை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். எப்போதும் உங்கள் சருமத்திற்கு தகுந்த க்ரீம்களை வாங்கி பயன்படுத்துங்கள். 

தொடர்ச்சியாக சருமத்திற்கு க்ரீம்களை பயன்படுத்தி வந்தால், சூரிய கதிர்கள் சருமத்தில் படும்போது, சருமத்தில் எரிச்சல், விரைவில் கருமை ஏற்படும். எனவே அளவுக்கு அதிகமாக க்ரீம்களை சருமத்திற்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget