கூந்தலை பராமரிக்கும் வழி முறைகள்

சாத்துக்குடி ஜூஸ் கூந்தலின் தரத்தை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. சாத்துக்குடி ஜூஸை கொண்டு கூந்தலை எப்படியெல்லாம்
பராமரிக்கலாம் என்று பார்க்கலாம். 

• சாத்துக்குடி பழத்தை சாறு எடுத்து, அத்துடன் தயிர் அல்லது க்ரீம் சேர்த்து கலந்து கூந்தலுக்கு தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், கூந்தலானது மென்மையாகவும், பொலிவோடும் இருக்கும். 

• சாத்துக்குடி ஜூஸை நேரடியாக கூந்தலுக்கு தடவினால், அதில் உள்ள வைட்டமின் சி சத்து கூந்தலின் வலிமையை அதிகரிக்கும். குறிப்பாக கூந்தல் அதிகம் உதிர்ந்தால், சாத்துக்குடி சாற்றினை நன்கு வடிகட்டிய பின் தலைக்கு தடவி ஊற வைத்து பின் அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், கூந்தலின் வலிமை அதிகரிக்கும். அதனை வாரம் ஒருமுறை செய்து வரலாம். 

• நரைமுடியால் அவஸ்தைப்படுபவர்கள், ஹென்னா பவுடரை சாத்துக்குடி ஜூஸ் சேர்த்து கலந்து, தலை முடிக்கு தடவி ஊற வைத்து குளித்தால், சாத்துக்குடியில் உள்ள காப்பரானது முடியில் உள்ள மெலனின் அளவை அதிகரித்து, கூந்தலை கருமையுடன் வைத்துக் கொள்ள உதவும். 

• சாத்துக்குடி சாற்றினை குடிப்பதன் மூலமும் தலைமுடியின் ஆரோக்கியம் அதிகரிக்கும். ஏனெனில் இதனால் அதில் உள்ள வைட்டமின் சி சத்தானது, கூந்தலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகிறது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget