சின்னத்திரை நாயகி ஸ்ருதி ராஜ்

தென்றல், ஆபீஸ் தொடர்களில் நடித்து வருகிறவர் ஸ்ருதி ராஜ். சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்துவிட்டு அங்கு வாய்ப்புகள் இல்லாமல்
சின்னத்திரைக்கு வந்தவர். தற்போது மீண்டும் சினிமாவில் வந்த அக்கா அண்ணி கேரக்டர்களை வேண்டாம் என்ற மறுத்துவிட்டார்.
இதுபற்றி ஸ்ருதி கூறியதாவது: நிறைய சினிமா வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் எனக்கென்னவோ சினிமாவில் நடிக்க பிடிக்கவில்லை. சின்னத்திரையில் நேசித்து நடித்து வருகிறேன். அவுட்டோர் ஷூட்டிங் இருக்காது. காலையில் படப்பிடிப்புக்கு வந்தால் மாலையில் வீட்டுக்கு போய்விடலாம். ஆபீஸ் போய் வரும் உணர்வே இருக்கும். ஒரே சீரியலில் ஆண்டு கணக்கில் நடிப்பதால் உடன் நடிப்பவர்கள் உறவினர்களாகவே ஆகிவிடுகிறார்கள். சினிமாவில் இதெல்லாம் இருக்காது.

தென்றல் தொடரில் கோலங்கள் தேவயானி இடத்தை பிடித்து விட்டதாக எல்லோரும் பாராட்டுகிறார்கள். 1100 எபிசோட்களில் நடித்தது என்னை பொறுத்தவரை சாதனைதான். ஆபீஸ் 300 எபிசோட்களை தாண்டி இருக்கிறது. மேலும் சில சிரியல் வாய்ப்புகள் வருகிறது. ஒரே நேரத்தில் இரண்டு சீரியல் போதும் என்று அவற்றையும் தவிர்த்து விட்டேன். என்கிறார் ஸ்ருதி.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget