அனுஷ்காவின் வெற்றி ரகசியம்

அனுஷ்கா தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் வந்த இவரது ‘அருந்ததி’ படம் வெற்றிகரமாக ஓடி வசூல்
சாதனை படைத்தது. ‘சிங்கம்’ மற்றும் ‘சிங்கம் 2’ படங்களும் ஹிட்டாயின. விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 

தெலுங்கு, தமிழில் பிரமாண்ட செலவில் தயாராகும் ‘ருத்ரமாதேவி’, ‘பாகுபலி’ ஆகிய இரு சரித்திர படங்களில் தற்போது நடித்து வருகிறார். ரஜினி ஜோடியாக ‘லிங்கா’விலும், கவுதம் இயக்கும் படத்தில் அஜீத் ஜோடியாகவும் நடிக்கிறார். வெற்றி ரகசியம் பற்றி அனுஷ்கா அளித்த பேட்டி வருமாறு:– 

எனது படங்கள் வெற்றிகரமாக ஓடுகின்றன. இது மகிழ்ச்சி அளிக்கிறது. படங்கள் வெற்றி பெறுவதற்கு நான் கடை பிடிக்கும் 3 கொள்கைகள் காரணமாக இருக்கின்றது. முதல் கொள்கை கதை, நல்ல கதையம்சம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்கிறேன். இரண்டாவது திரைக்கதையை சிறப்பாக உருவாக்கி இருக்கிறார்களா? என்று பார்க்கிறேன். மூன்றாவதாக திறமையான டைரக்டர்தானா என்பதை உறுதி செய்து கொள்கிறேன். இதுவே என் வெற்றிக்கான ரகசியங்கள். 

நடிகைகளுக்கு அழகு முக்கியம். உடம்பை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். வெளிப்புற அழகை போல் மனதையும் அழகாக வைத்துக் கொள்வது அவசியம். இதற்காக உடற்பயிற்சிகள் செய்கிறேன். 

இவ்வாறு அனுஷ்கா கூறினார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget