பெயரை மாற்றும் ஜோதிட நாயகிகள்

ஜோதிட நம்பிக்கையால் கதாநாயகிகள் பலர் தங்கள் பெயர்களை மாற்றுகின்றனர். இன்னும் சிலர் பெயர்களோடு எண்கணித ஜோதிடப்படி சில
எழுத்துக்களை சேர்த்து வருகிறார்கள். 

லட்சுமிராய் சமீபத்தில் தனது பெயர் ராய்லட்சுமி என மாற்றினார். இந்த பெயர் மாற்றத்துக்கு பிறகு படவாய்ப்புகள் குவிகின்றன. இதுபோல் நீது சந்திராவும் பெயரை மாற்றினார். ஆரம்பத்தில் இவரது பெயர் நிட்டு சந்திரா என இருந்தது. 

இதுபோல் தற்போது ஜனனி அய்யரும் தனது பெயரை மாற்றியுள்ளார். அய்யர் என்பதை பெயரில் இருந்து அவர் நீக்கி விட்டார். இனி ஜனனி என்றே அவரை அழைக்க வேண்டுமாம். 

ஜனனி அய்யர் ‘திருதிரு துறுதுறு’ ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அவன் இவன்’, ‘பாகன்’, ‘தெகிடி’ படங்களில் நடித்துள்ளார். மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். பெயரை மாற்றியது குறித்து ஜனனி கூறும்போது, 

‘தெகிடி’ படம் வருவதற்கு முன்பு வரை என் பெயர் ஜனனி அய்யர் என்றே இருந்தது. ஆனால் ‘தெகிடி’ படத்தின் டைட்டிலில் வெறும் ஜனனி என்று குறிப்பிட்டு இருந்தது. அந்த பெயர் எனக்கு ராசியாக இருப்பது போல் உணர்ந்தேன். எனவே அய்யரை நீக்கி விட்டு ஜனனி என்ற பெயரையே வைத்துக் கொண்டேன் என்றார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget