கட்டம் கட்டுவாரா மனீஷா யாதவ்

வழக்கு எண் படத்தில் அறிமுகமான மனீஷா யாதவிற்கு அதற்கு பிறகு பெரிய அளவில் படங்கள் அமையவில்லை, சுசீந்திரன் இயக்கிய ஆதலால்
காதல் செய்வீர் படத்தில் நல்ல பெயர் கிடைத்தும் படம் ஓடாததால் அடுத்த பட வாய்ப்பு கிடைக்கவில்லை, சீனு ராமசாமி இயக்கும் இடம் பொருள் ஏவல் படத்தில் ஒப்பந்தமாகி, பின்னர் அதிலிருந்து திடீரென்று நீக்கப்பட்டார், இந்த நிலையில் மனீஷா ரொம்பவும் நம்பிக் கொண்டிருப்பது எஸ்.பி.ராஜ்குமார் இயக்கி உள்ள பட்டைய கிளப்பணும் பாண்டியா படத்தைத்தான்.

இந்தப் படம் இரண்டு வருடங்களுக்கு முன்பே தயாரானது. வழக்கு எண் படத்திற்கு பிறகு மனீஷா கமிட்டானது இந்தப் படத்தில்தான். பழனியிலிருந்து பாப்பம்பட்டிக்கு செல்லும் ஒரு மினி பஸ்சை மையமாக வைத்து இந்தப் படத்தை ராஜ்குமார் இயக்கி உள்ளார், இதில் பஸ் டிரைவராக விதார்த்தும், நடத்துனராக சூரியும் நடித்துள்ளனர், பஸ்சில் பயணம் செய்து பக்கத்து ஊருக்கு படிக்கப்போகும் மாணவியாக மனீஷா நடித்துள்ளார்.

"வடிவேலுக்கு நான் எழுதிய காமெடிகளை மக்கள விரும்பி ரசித்தார்கள், அதேபோல இந்தப் படத்தையும் ரசிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். மு்ன்று பேரை சுற்றி நடக்கிற காதல் காமெடி கதை. படத்தில் மினிபஸ்சும் ஒரு கேரக்டராகவே நடித்துள்ளது. பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக படம் தாமதமாகிவிட்டது என்றலும் இது எப்போது வெளிவந்தாலும் வெற்றி பெறக்கூடியது. அடுத்த மாதம் ரிலீசாகிறது" என்கிறார் இயக்குனர் எஸ்.பி.ராஜ;குமார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget