அம்மாவாக நடிக்கும் ரம்யா

தமிழில் சிம்பு நடித்த குத்து படத்தில் அறிமுகமானவர் ரம்யா. கன்னட நடிகையான இவர் அதன்பிறகு பொல்லாதவன், வாரணம் ஆயிரம்
உள்பட சில படங்களில் நடித்தார். பின்னர் கன்னட படங்களில் நடித்து வந்தபோது மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டி எம்பியார். அதனால் தான் நடித்து வந்த ஒரு படத்தைகூட இழுபறியில் தவிக்க விட்டார் ரம்யா. அதன்பிறகு நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு அந்த படத்தை முடித்துக்கொடுத்தார்.

இந்த நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை தழுவியதால், எம்.பி பதவியை இழந்த ரம்யா மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அதனால் கதைகளும் கேட்கத் தொடங்கியிருக்கிறார். இந்தநேரத்தில், ஏற்கனவே ரம்யா நடித்த சஞஜூ வெட்ஸ் கீதா என்ற படத்தின் இரண்டாம் பாகத்தில் ரம்யாவை மீண்டும் நடிக்க கேட்டுக்கொண்டுள்ளார்களாம்.

ஆனால், முதல் பாகத்தில் அவருக்கு ஒரு குழந்தை பிறப்பது போன்று கதை பண்ணிய டைரக்டர் நாகேஷ்வர், இப்போது அந்த கதையின் தொடர்ச்சி என்பதால், குழந்தைக்கு அம்மாவாக ரம்யாவை நடிக்குமாறு கூறியுள்ளாராம். இதனால் ரம்யாவுக்குள் சிறிய அளவில் தயக்கம் உள்ளதாம். இப்போதே அம்மாவாக நடித்தால் அதன்பிறகு ஆளாலுக்கு இந்த மாதிரி கதைகளோடு வருவார்களே என்று யோசிக்கும் ரம்யா, சிறிது கால அவகாசம் கேட்டுள்ளாராம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget