இந்திய ரயில்வேயின் டிக்கட் வழங்கும் இணைய தளம்

இந்திய ரயில்வேயின் டிக்கட் வழங்கும் இணைய தளம் தான், இந்தியாவிலேயே அதிகம் பயன்படுத்தப்படும் இணைய தளம் என்று பெயர்
பெற்றதாகும். இதனை நிர்வகிக்கும் IRCTC நிறுவனம் தற்போது அந்த தளத்தினை புதுமைப் படுத்தியுள்ளது. இந்த நிறுவனத்திற்கு இதனை வடிவமைத்துக் கொடுத்த்து Centre for Railway Information Systems (CRIS) என்னும் நிறுவனமாகும். 

இந்த புதிய தளம் கூடுதல் திறனுடனும், வசதிகளுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு நிமிட த்தில் 7,200 டிக்கட்களை இத்தளம் வழங்கும். ஏற்கனவே இயங்கி வந்த தளம், நிமிட த்திற்கு 2,000 டிக்கட்களையே வழங்கும் திறன் கொண்டிருநத்து. 

பயனாளர், டிக்கட் ஒன்றை புக் செய்கையில், ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், விடுபட்ட இடத்திலிருந்து மீண்டும் அவர் தொடங்க முடியும். முடிவடையாமல் போன முயற்சி குறித்து டெக்ஸ்ட் மெசெஜ் ஒன்றை இப்போதைய இணைய தளம் அனுப்பும். 

பயனாளர் இத்தளத்தில் பதிவு செய்து செயல்படுத்துவது, இன்னும் பல கூடுதல் சோதனை முறைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதனால், திருட்டுத்தனமாகப் பதிவு செய்பவர்கள் அறவே ஒழிக்கப்படுவார்கள் என்று ஐ.ஆர்.சி.டி.சி. அறிவித்துள்ளது. 

பழைய இணைய தளம் தட்கல் டிக்கட் புக் செய்திடும் காலை 10 முதல் 12 மணி வரை அடிக்கடி செயல் இழந்து போய் நின்றது. இனி, அந்தப் பிரச்னை ஏற்படாது. 

இனையம் வழி ரயில் பயண டிக்கட் வாங்குவதனையே மக்கள் விரும்புகின்றனர். ஐ.ஆர்.சி.டி.சி. வருமானத்தில், இணைய டிக்கட் புக்கிங் மூலமாக 27% வருமானம் கிடைக்கிறது. 201112 ஆம் ஆண்டில், புக் செய்யப்பட்ட டிக்கட்களின் எண்ணிக்கை 11.6 கோடியாக இருந்தது. இது அடுத்த ஆண்டில், 14.1 கோடியாக உயர்ந்தது. சராசரியாக தற்போது நாள் ஒன்றுக்கு 4 லட்சம் டிக்கட்கள் பதிவு செய்யப்படுகின்றன.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget