ஆபீஸ் தொகுப்பை நிராகரித்த சீனா

ஒரு மாதத்திற்கு முன்னால், சீன அரசு தன் அரசு அலுவலகக் கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்ட்த்தினைப் பயன்படுத்த்த் தடை
விதித்த்து. தொடர்ந்து அண்மையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பினைப் பயன்படுத்துவதற்கும் தடை விதித்துள்ளது. இதற்குப் பதிலாக, சீன மொழியில் அமைந்த, சீன நாட்டில் உருவாக்கப்பட்ட தொகுப்புகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது. குறிப்பாக இலவசமாகக் கிடைக்கும் Kingsoft Office என்னும் தொகுப்பினைப் பயன்படுத்த உத்தரவிட்டுள்ளது. 

சீன அரசின் இந்த நடவடிக்கை, விண்டோஸ் எக்ஸ்பிக்கு தன் நாட்டில் மட்டுமாவது சப்போர்ட் தரும்படி அரசு விடுத்த கோரிக்கையினை, மைக்ரோசாப்ட் நிராகரித்ததே காரணம். ஏறத்தாழ, சீனர்களின் 40 சதவீதக் கம்ப்யூட்டர்களில் இன்னும் விண்டோஸ் எக்ஸ்பி தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விண்டோஸ் 8 தொகுப்பிற்கு தடை விதித்தவுடன், மைக்ரோசாப்ட் அதிர்ச்சி அடைந்தது. ஒரு கோடிக்கும் மேல் விண்டோஸ் பயனாளர்கள் உள்ள நாட்டில் இது போன்ற அரசு உத்தரவுகள் தன் வருமானத்திற்கு பெரிய தடைக் கல்லாக இருக்கும் என மைக்ரோசாப்ட் கருதியது.

விண்டோஸ் 8 சிஸ்டம் பயன்படுத்தக் கூடாது என்ற தடையினை விதித்தாலும், சீனாவில் விண்டோஸ் 7 இன்னும் பெரும்பான்மையான கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சீன அரசைப் பொறுத்த வரை, விண்டோஸ் 8 அந்நாட்டின் பாதுகாப்பிற்கு எதிரானது என்று அறிவித்துள்ளது. 

இந்த சூழ்நிலையில், சீன அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த முயற்சிகளை மேற்கொண்டிருந்த நிலையில், சூழ்நிலையை இன்னும் மோசமாக்கும் வகையில், சீன அரசு எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பிற்கும் தடை விதித்துள்ளது. மைக்ரோசாப்ட் தனக்கு வருமானம் தரும் பெரிய சந்தையை இதன் மூலம் இழக்க இருக்கிறது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget