கூந்தல் பிரச்சனைக்கு சுலபமான தீர்வு

இன்றைய தலை முறையினரிடம் இன்று மாபெரும் பிரச்சினையாக உருவெடுத்திருப்பது ஆண், பெண் இருபாலருக்கும் முடி உதிர்தல் என்பதாகும்.
சிலருக்கு இதனால் திருமண வாழக்கையே கூட அமையாமல் தள்ளி போகின்றது. உருவ அழகை அதிகப் படுத்துவதில் கூந்தலுக்கு பெரும் பங்குண்டு. 

அதிக நேரம் கண் விழித்தல், இரவுப் பணி செய்தல், நீண்ட நேரம் கணிணி முன் அல்லது தொலைக்காட்சி பெட்டி முன் அமர்ந்திருத்தல், வெயிலில் அதிக பிரயாணம் செய்தல் போன்ற காரணங்களால் உடல் உஷ்ணம் அதிகரித்து தலையில் வியர்வை உண்டாகிறது. 

வியர்வையோடு, காற்றில் பறந்துவரும் தூசிகளும் தலையில் படிந்து உடலுக்கு ஊரு செய்யும் கிருமிகளின் (பாக்டீரியா) விளை நிலமாக தலை மாறிவிடுகிறது. இதனால் பேன், பொடுகு போன்ற உயிரினங்கள் உருவாகின்றன. இவை தலை முடியின் ஆரோக்கியத்தை பாதித்து முடி உதிரச் செய்கின்றன. 

மேலும் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் வழக்கம் மறைந்து போனதும் இதற்கு ஆதரவாகி விட்டது. நன்கு முற்றிய சோற்றுக் கற்றாழை மடல்கள் சிலவற்றை துண்டித்து எடுத்து பக்கங்களில் உள்ள முட்களை சீவி நீக்கிவிட்டு, குறுக்கே அரிந்து உள்ளே இருக்கும் (நெல்) கூழ் போன்ற பகுதியை சுரண்டி எடுத்து, அதில் சிறிது படிக்காரத்தூள் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கக் கூடியது) தூவி இரவு முழுதும் விட்டு வைக்க சோற்றுக் கற்றாழையில் இருந்து நீர் தனித்து பிரிந்துவிடும். 

கற்றாழை நீரைப் பிரித்து எடுத்து அதற்குச் சம அளவு நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயும் கலந்து கொள்ளுங்கள். இத்துடன் ஓரிரு கைப்பிடி அளவு கறிவேப்பிலையை எடுத்து விழுதாக அரைத்து முன் கூட்டிய கலவையில் கலந்து அடுப்பிலேற்றி சிறு தீயில் காய்ச்சுங்கள். 

பாத்திரத்தில் இட்ட எண்ணெயின் அளவு மட்டும் மிச்சம் இருக்கின்ற அளவு காய்ச்ச வேண்டும். மேலும் எண்ணெயிலிட்ட கறிவேப்பிலைத் துகள்கள் கையில் எடுத்து நக்கிப் பார்க்கும் போது குழகுழப்புத் தன்மை இல்லாமல் மணல் பாங்காக சொரசொரப்புத் தன்மை பெற்றிருக் வேண்டும். 

இதுதான் எண்ணெய் சரியாகக் காய்ச்சியதற்கான அடையாளம் ஆகும். பின்னர் எண்ணெயை இறக்கி ஆறவைத்து வடிகட்டி ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு தலைக் குத் தடவிவர முடிகொட்டுவது குறையும். 

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குமரிச்சாற்றால் செய்த எண்ணெயை தலையில் இட்டு நன்றாக மண்டை ஓட்டின் மேல் பகுதியில் படும்படி இட்டு மசாஜ் செய்ய வேண்டும். இதனால் தலையிலுள்ள பொடுகு குணமாகும். 

தலைமுடிக்கு பலம் கிடைக்கும். உடல் சூடு தணியும், கண்கள் குளிர்ச்சி பெறுவதுடன் பார்வையும் தெளிவு பெறும். இளநரை மாறும். தலைமுடி பளபளப்பும், மென்மையும் பெறும். இந்த எண்ணெயை வாசகர்கள் வீட்டிலேயே செய்து பயன்படுத்தலாம். 

சந்தையில் பல ஆயிரம் ரூபாய் விலையில் விற்கும் எண்ணெய்களைவிட இது எந்த வகையிலும் குறைந்தாக இருக்காது. குழந்தைகள் முதல் ஆண் பெண் அனைவரும் இதைப் பாதுகாப்பாக பயன்படுத்தலாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget