குதிங்கால் வலியா கவலைய விடுங்க

பெண்களுக்கு உடலில் ஏற்படும் வலிகளில் குதிகால் வலி முதன்மையான இடத்தை பெறுகிறது. இன்றைய தலைமுறையினரின்
பெரும்பாலானவர்கள் இந்த வலியால் அவதிபடுகின்றனர். பிளான்டார் பேஷியைடிஸ் எனப்படும் குதிங்கால் வலி, தூங்கியெழுந்தால் வலி உண்டாவதும் நடக்க நடக்க வலி குறைவதுமான விசித்திர பிரச்சினையாகும். 

பிளான்டார் பேஷியா என்று பாதத்தில் ஒரு தோல் போன்ற அமைப்புள்ளது. இது தட்டை பாதம் உள்ளவர்களுக்கும் அதிக எடை உள்ளவர்களுக்கும், பாத வளைவு அதிகப்படியாக இருப்பவர்களுக்கும் அதிக இறுக்கம் ஏற்பட்டு, குதிங்கால் வலி ஏற்படுத்துகிறது. 

சிலருக்கு குதிக்காலில் எலும்பு குருத்து வளர்ந்து வலி ஏற்படுகிறது. இது ஒரு சாதாரண பிரச்சினையே 95 சதவீதத்தினருக்கு சாதாரண பயிற்சியே இதை சரி செய்ய போதுமானது. 

பயிற்சி:  மிதமான வெண்ணீரில் கால் மணி நேரம் தினமும் பாதத்தை வைக்கவும். பிறகு பாதத்தில் முன் பகுதியை 10-15 செ.மீ. உயரமான பொருளில் வைத்து ஸ்ட்ரெட்ச் செய்வது போல் அழுத்தவும். இந்த பயிற்சி பலனளிக்காமல் போனால் அதற்கு இன்ஜெக்ஷல் செய்து சரிசெய்யலாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget