உலகிலேயே மிக குறுகலான, தடிமன் கொண்ட மொபைல் போன் ஒன்றை XOLO நிறுவனம் வெளியிட உள்ளது. இதுவரை சீன நிறுவனமான
ஜியோனி (Gionee) தயாரித்து வழங்கிய Elife S 5.5, என்ற மொபைல் போன் தான், மிகக் குறைந்த தடிமன் அளவில் தயாரிக்க்ப்பட்ட போனாக உள்ளது. இதன் தடிமன் 5.5 மிமீ. இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் ஸோலோ நிறுவனத்தின் மொபைல் போன் தடிமன் 5 மிமீ மட்டுமே இருக்கும். இதுவே, உலகின் மிக எடை குறைவான போனாகவும் (100 கிராம்) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனின் மாடல் பெயர் GN9005. இதில் 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர், 1 ஜி.பி. ராம் மெமரி, ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி., 2050mAh பேட்டரி ஆகியன இருக்கும். திரை 4.8 அங்குல அகலத்தில் AMOLED டிஸ்பிளே காட்டும். பின்புறமாக 8 எம்.பி. கேமராவும், முன்புறமாக 5 எம்.பி. கேமராவும் இணைக்கப்படும்.
இது விற்பனைக்கு வரும் காலம் குறித்தும் விலை குறித்தும் இன்னும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

கருத்துரையிடுக