தலை முடியை எளிதாக பராமரிக்க வேண்டுமா

தலைமுடியின் வறட்சியை போக்க வாரம் ஒரு முறை முட்டையின் வெள்ளை கருவை தலையில் தேய்த்து 20 நிமிடம் கழித்து முடியை அலசவும்.
முடி மென்மை யாகவும், மினுமினுப்பாகவும் இருக்கும். பொடுகு தொல்லை நீங்க தேங்காய் பூவை மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைத்து பிழிந்து வடிகட்டி முடியின் வேர்களில் தடவி 20 நிமிடம் கழித்து முடியை அலசவும். வாரம் ஒரு முறை செய்யவும். பேன் தொல்லை நீங்க வேப்பிலையை அரைத்து தலையில் பேக்காக போட்டு அரைமணி நேரம் கழித்து முடியை அலசவும்.

வெளியில் சென்று வீட்டிற்குள் வருவதற்கு முன் கால்களை நன்கு கழுவி விட்டு வர வேண்டும். இது சுகாதாரமான பழக்கம் மட்டுமல்ல, உடல் சூட்டையும் கட்டுப்படுத்தும் பழக்கமாகும். நம் பாதங்கள் மற்றும் உள்ளங்கைகள் உடலின் வெப்பத்தை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை. இதனால் பாதங்களை குளிர்ந்த நீரால் கழுவும் போது வெயிலில் அலைந்து விட்டு வருவதால் ஏற்படும் சூடு தணிகிறது. தினமும் இரவு படுக்கும் முன் கால்களை நன்கு கழுவி துடைத்துக் கொண்டு படுக்க வேண்டும். தினமும் இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் காலில் வெடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படாது. குதிகால் பகுதிகளில் கடினமாகியிருக்கும் தோல்(டெச் செல்) பகுதியை பியூமிஸ் கற்கள் கொண்டு தேய்த்து அகற்ற வேண்டும். 

அவ்வப்போது, நகங்களை வெட்டி விட வேண்டும். கால்களுக்கு இதமான செருப்புகளை அணிய வேண்டும், குதிகால் உயர்ந்த செருப்புகளை அத்தியாவசியமான நேரங்களில் மட்டுமே அணிய வேண்டும். மற்ற நேரங்களில் தவிர்க்கவும். 60 வயதுக்கு மேலானவர்களின் தோல் மிகவும் மெல்லியதாகி விடும். எலும்புகளும் பலவீன மடைந்திருக்கும். எனவே அவர்கள் இதமான எடை குறைந்த செருப்பை தேர்வு செய்வது அவசியம். குளிர் காலங்களில் வெறும் கால்களால் கிரானைட், மார்பிள் தரைகளில் நடப்பதை தவிர்க்க வேண்டும்.

சிலரது உடல் தொட்டால் ஜுரம் அடிப்பது போல சுடும். இவர்கள் இரவு படுக்கும் முன் உள்ளங்கால்களில் நல்லெண்ணெய் தடவி படுத்தால் உடல் சூடு, கண்களில் எரிச்சல் குறையும். சுடுநீரில் ஒரு பிடி கல்உப்பை போட்டு கால்களை 15 நிமிடங்கள் வைத்திருந்து எடுத்தால் பாதங்களில் உள்ள வலி குறையும். பித்த வெடிப்பு உள்ளவர்கள் பாதங்களை ஊறவைத்து பின்னர் பியூமிஸ் கற்களை கொண்டு தேய்த்தால் வெடிப்பு குணமாகும். பாதங்களை பராமரிப்பதில் ஆண், பெண் பேதம் தேவையில்லை.

முடி கொட்டுதலை தவிர்க்க ஆரஞ்சு மற்றும் எலுமிச்சம் பழத்தின் காய்ந்த தோல், பூந்திக்காய், செம்பருத்திபூ மற்றும் இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து பிறகு இதை அரைத்து பேஸ்ட்டாக்கி ஷாம்பூ போல் உபயோகித்து தலைக்கு குளியுங்கள்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget