தாய்ப்பால் கொடுப்பவர்கள் அறிய வேண்டியவை

தாய்மை என்ற சொல் மிகவும் புனிதமானதாகும். ஒவ்வொரு பெண்ணும் தாயாவதற்கு தவம் இருப்பாள். முதல் கர்ப்பம் என்றால் பயம் கலந்த
சந்தோஷ உணர்வை பெறுவீர்கள். நீங்கள் எவ்வளவு தான் தயாராக இருந்தாலும் கூட, நீங்கள் அறியாதது சில வகைகள் நடக்கலாம். 

தாய்ப்பால் சுரப்பது இயற்கையானது என்பதால் தாய்ப்பால் கொடுப்பது ஒன்றும் பெரிய வேலை இல்லை என நீங்கள் நினைத்திருப்பீர்கள். ஆனால் தாய்மை காலத்தில் கடினமான வேலைகளில் முக்கியமானதாக விளங்குகிறது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது. 

குழந்தை சரியாக வாயை கொடுக்காமல் போகலாம், உங்களுக்கு போதிய அளவு பால் சுரக்காமல் போகலாம், காம்புகளில் புண் ஏற்படலாம், பால் வருவதில் அடைப்பு ஏற்படலாம் அல்லது மார்பகங்களில் அழற்சி ஏற்படலாம். 

இதெல்லாம் போக, ஹார்மோன் மாற்றங்களால் தூக்கமின்மை ஏற்பட்டு உங்களுக்கு குற்ற உணர்வும் உண்டாகும். மருத்துவர் அல்லது செவிலியரின் உதவியை நாடி, இந்த நுட்பத்தை பற்றி புரிந்து கொள்ளுங்கள். அதை விட்டு விட்டு நீங்கள் ஒரு சிறந்த தாயாக இருக்க முடியவில்லை என வருந்தாதீர்கள். 

உங்கள் உணவு பழக்கத்தின் மீது கவனம் தேவை. அதே போல் போதுமான அளவிலான தண்ணீரை குடியுங்கள். போதுமான அளவில் தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை என்றாலும் கூட அதற்காக வருத்தப்படாதீர்கள்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget