ஒன் ட்ரைவ் பற்றி தெரியுமா

க்ளவ்ட் ஸ்டோரேஜ் சந்தையில் ஏற்பட்டுள்ள பலத்த போட்டியின் காரணமாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் ஒன் ட்ரைவில், அதன்
பயனாளர்களுக்கு 15 ஜிபி இலவச இடம் வழங்குகிறது. கூகுள் ட்ரைவ் வழங்கும் இலவச இடத்திற்கு இணையானதாக இது உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு மைக்ரோசாப்ட் 7 ஜிபி இலவச இடம் அளித்த்து. இடம் அதிகப்படுத்தலைத் தொடர்ந்து பயனாளர்கள், கூடுதலாக தங்கள் டாகுமெண்ட் பைல்கள், படங்கள் மற்றும் வீடியோ பைல்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் சேவ் செய்து கொள்ளலாம். 

தன் ஆபீஸ் 365 சந்தாதாரர்களுக்கு அளித்து வந்த இட த்தையும் மைக்ரோசாப்ட் ஒரு டெரா பைட்டாக உயர்த்தியுள்ளது. ஏற்கனவே இவர்களுக்கு 20 ஜிபி அளித்து வந்த்து. இவர்கள் இதுவரை மாதம் ஒன்றுக்கு 9.99 டாலர் செலுத்தி 20 ஜிபி பெற்று வந்தனர். 

இப்போது அதே கட்டணத்தில் 1 டெரா பைட் இடம் வழங்கப்படுகிறது. மைக்ரோசாப்ட் தன் ஒன் ட்ரைவ் மூலம் கூகுள் ட்ரைவ், ட்ராப் பாக்ஸ், அமேஸான் க்ளவ்ட் ட்ரைவ் ஆகியவற்றுடன் போட்டியிட்டு வருகிறது. சென்ற மார்ச் மாதம் கூகுள் தன் ட்ரைவ் இடத்திற்கான கட்டணத்தை வெகுவாகக் குறைத்தது நினைவிருக்கலாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget