மைக்ரோமேக்ஸ் போல்ட் ஏ 082 ஸ்மார்ட்போன்

ரூ.4,399 அதிக பட்ச விலை எனக் குறியிடப்பட்டு, மைக்ரோமேக்ஸ் போல்ட் ஏ 082 மொபைல் போன் விற்பனைக்கு வந்துள்ளது. போல்ட் வரிசையில்,
அண்மையில் வெளியான ஸ்மார்ட்போன் இது. ஸ்நாப்டீல் வர்த்தக இணைய தளம் மூலம் இப்போதைக்கு விற்பனையாகிறது. இதில் முன்புறமாக இரண்டு ஸ்பீக்கர்கள் தரப்பட்டுள்ளன. மியூசிக் பைல்களை இசைக்கவென தனி கீ ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2ஜி இணைப்பினைத் தரும். இரண்டு சிம்களை இயக்கும். இதன் திரை காட்டும் டிஸ்பிளே 800 x 480 பிக்ஸெல் திறன் கொண்டது. திரை அகலம் 3.97 அங்குலம்.

இதில் 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படும் டூயல் கோர் ப்ராசசர் உள்ளது. 512 எம்.பி. ராம் நினைவகம், ஸ்டோரேஜ் மெமரி 4 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் அதிகப்படுத்தலாம். இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட் ஆகும். இதன் பின்புறக் கேமரா 2 எம்.பி. திறன் எல்.இ.டி. ப்ளாஷ் கொண்டது. பின்புறமாக 0.3 எம்.பி. திறனுடன் கூடிய கேமரா தரப்பட்டுள்ளது. எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடீயோ ஜாக் தரப்பட்டுள்ளது. நெட்வொர்க் இணைப்பில் 2ஜி, வை பி, புளுடூத் 4.0 இயங்குகின்றன. இதன் பேட்டரி 1,700 mAh திறன் கொண்டதாக உள்ளது. 

ஆன்லைன் வர்த்தகத்தில் இதன் அதிகபட்ச விலை ரூ. 4,399 என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெள்ளை வண்ணத்தில் மட்டுமே இது கிடைத்தாலும், நீலம், வயலெட், மஞ்சள் மற்றும் சிகப்பு வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டு கிடைக்க இருக்கின்றன.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget