ஐ படத்தின் பாடல்கள் முழு விபரம்

தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பி விட்டிருக்கும் படம் ஐ. பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், பிரமாண்ட தயாரிப்பாளர்
ஆஸ்கர் ரவிச்சந்திரனின் தயாரிப்பில், விக்ரமின் மிரட்டும் நடிப்பில், பி.சி.ஸ்ரீராமின் அழகிய ஒளிப்பதிவு, ஆஸ்கர் நாயகன் ரஹ்மானின் இசை என படத்திற்கு ஏகப்பட்ட ப்ளஸ் பாயிண்டுகளுடன் தயாராகி வரும் ஐ படத்தின் ஆடியோ வெளியீட்டு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வருகிற செப் 15ம் தேதி பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு பங்கேற்க இருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் முதல் போஸ்டர் மோஷன் கேப்டசரிங் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதில் விக்ரமின் தோற்றத்தை பார்த்து அனைவரும் மிரண்டு போய் உள்ளனர். இதனிடையே இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மொத்தம் 7 பாடல்கள் உருவாகியுள்ளன. மதன்கார்கி மற்றும் கபிலன் ஆகியோர் படத்திற்கான பாடல்களை எழுதியுள்ளனர்.

அதைப்பற்றிய விபரம் வருமாறு...

1. பூக்களே சற்று ஓய்வெடுங்கள்... பாடலை ஹரிச்சரண், ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளனர்.

2. லடியோ... பாடலை நிகிதா காந்தி பாடியுள்ளார்.

3. மெர்சலாட்டியன்...(ரீ-மிக்ஸ்) பாடலை அனிருத்தும், நீதி மோகனும் பாடியுள்ளனர்.

4. என்னோடு நீ இருந்தால்... பாடலை சித் ஸ்ரீராமும், சுனிதா சாரதியும் பாடியுள்ளனர்.

5. மெர்சலாட்டியன்... பாடலை அனிருத்தும், நீதி மோகனும் பாடியுள்ளனர்.

6. என்னோடு நீ இருந்தால்... பாடலை சித் ஸ்ரீராமும், சுனிதா சாரதியும் பாடியுள்ளனர்.

7. உண்மை காதல்... பாடலை சின்மயி, சித் ஸ்ரீராம் பாடியுள்ளனர்.

8. கொஞ்ச கொஞ்சமாய்... பாடலை ஆதித்யா ராவ், நதாலி டி லூசியா பாடியுள்ளனர்.

ரசிகர்களே காத்திருங்கள்... ஐ படத்தின் பாடல்களை ரசிக்க இன்னும் இரண்டு நாட்களில்...!!
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget