சாதாரண வசதி, கேமரா போன், ஆடியோ போன், ஸ்மார்ட் போன் என்றெல்லாம் தனிப் பெயர் கொண்டு மொபைல் போன்கள் விற்பனைச்
சந்தையில் வந்தன. இப்போது தங்களைத் தாங்களே போட்டோ எடுத்துக் கொள்ள உதவும் செல்பி போன் என்றக் குறிப்புடன் மொபைல் போன்கள் வடிவமைக்கப்பட்டு கிடைக்கின்றன. சோனி நிறுவனம், அண்மையில் தன் எக்ஸ்பீரியா சி 3 போனை, செல்பி ஸ்மார்ட்போன் என அறிமுகம் செய்துள்ளது.
இதன் சிறப்பு அம்சங்கள்: 5.5 அங்குல திரை 1280 x 720 பிக்ஸெல் திறனுடன் தரப்பட்டுள்ளது. இதில் மொபைல் பிரேவியா இஞ்சின் 2 தொழில் நுட்பம் உள்ளது.1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவால்காம் ஸ்நாப் ட்ரேகன் 400 ப்ராசசர், 1 ஜிபி ராம் மெமரி, ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரியை 64 ஜி.பி வரை அதிகப்படுத்தும் வசதி, ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டம், இரண்டு சிம் இயக்கம், 8 எம்.பி. திறனுடன் பின்புறக் கேமரா. இதில் எக்ஸ்மார் ஆர்.எஸ். சென்சார், எல்.இ.டி. ப்ளாஷ், 1080பி விடியோ பதிவு, முன்புறமாக 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா. இதில் 25 மிமீ வைட் ஆங்கிள் லென்ஸ், 720பி விடியோ பதிவு திறன் கொண்டதாக உள்ளது. ஆர்.டி.எஸ். தொழில் நுட்பத்துடன் ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக், நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் 4.0, ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் உள்ளன. இதன் பேட்டரி 2,500 mAh திறன் கொண்டதாக உள்ளது. சோனி எக்ஸ்பீரியா சி3, கருப்பு, வெள்ளை மற்றும் மிண்ட் வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டு கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.23,990. இந்த மாதம் முதல் வாரத்தில் இருந்து இது விற்பனை செய்யப்படுகிறது.

கருத்துரையிடுக