கோலிவுட் நாயகி ஷிவதா

நெடுஞ்சாலை படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷிவதா. அந்தப் படத்திற்காக இரண்டு வருடங்கள் வேறு படங்களில் நடிக்காமல் இருந்தார். இப்போது
நெடுஞ்சாலை ரிலீசாகிவிட்டதால் மளமளவென படங்களை ஒப்புக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார். ஏற்கெனவே ஜீரோ என்ற திகில் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.



இப்போது மூன்றாவதாக அருவி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் பென்சில் படத்தை தயாரித்து வரும் கல்ஷன் மூவீஸ் தயாரிக்கிறது. தற்போது தயாரிப்பில் இருக்கும் ஷிவானி படத்தில் நடித்து வரும் சந்த்ரு ஹீரோவாக நடிக்கிறார். ராஜேஷ் ராஜ் இசை அமைக்கிறார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார். கிருஷ்ணா நடித்த அலிபாபா படத்தை இயக்கிய நீலன் இயக்குகிறார்.
"வீழ்ச்சியிலும் எழுச்சி காண்பது அருவி. அது அதன் தனித்தன்மை. அருவி அழகு நிறைந்ததைப்போல ஆபத்தும் நிறைந்தது. இந்த கருத்தை மையமாக வைத்து படம் தயாராகிறது. அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது" என்கிறார் நீலன்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget