நான் கோபக்காரியா - மோனல் கஜ்ஜார்

வானவராயன் வல்வராயன், சிகரம் தொடு படங்களில் நடித்திருப்பர் மோனல் கஜ்ஜார். மோஸ்ட் வாண்டட் புதுமுகமும் அவர்தான்.
ஆனால் அவர் கோபக்கார நடிகை, சம்பளம் அதிகமாக கேட்கிறார். துணைக்கு ஆட்களை நிறைய அழைத்து வருகிறார் என்று ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது இருக்கிறது. 

இதுபற்றி மோனல் கூறியதாவது: நான் கொஞ்சம் முன்கோபிதான். ஆனால் அது சில விநாடிதான் நீடிக்கும். சின்ன வயதிலிருந்தே எனக்கு பிடிக்காதபடி யாராவது நடந்தால் கோபம் வந்துவிடும். அதை மாற்றிக் கொள்ள முடியவில்லை. மாற்றிக் கொள்ள முயற்சிக்கிறேன். ஒரு பெண்ணால் எல்லா நேரமும் சந்தோஷமான மூடிலேயே இருக்க முடியாது என்பதையும் மற்றவர்கள் உணரவேண்டும்.

என் தகுதிக்கு என்ன சம்பளமோ அதைத்தான் கேட்கிறேன். அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற இமேஜ் கிடைத்தால் சந்தோஷம்தான். கிளாமர் காட்சியிலோ, முத்தக் காட்சியிலோ நடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன். அப்படி ஏதாவது இருக்கிறதா என்று கதை சொல்ல வருபவர்களிடம் கேட்கிறேன். உடனே நான் நிபந்தனை விதிப்பதாக வெளியில் சொல்லிவிடுகிறார்கள். சினிமாவில் இப்படியெல்லாம் பிரச்சினைகள் வரும் என்று எனக்குத் தெரியாது. இருந்தாலும் சமாளிக்கிறேன் என்கிறார் மோனல்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget