2000மாவது ஆண்டில் மிஸ் யுனிவர்சாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் லாரா தத்தா. அதன் பிறகு சினிமாக்களில் நடித்தார். தற்போது உலக
அழகிகளை உருவாக்கும் பணியில் இறங்கி இருக்கிறார்.மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்கு இந்திய அழகிகளை தேர்வு செய்து அனுப்பும் நிகழ்ச்சி "மிஸ் திவா யுனிவர்ஸ்" ஆண்டு தோறும் நடக்கும். இதில் வெற்றி பெறுகிறவர்கள்தான் மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இந்த ஆண்டுக்கான இந்த நிகழ்ச்சி விரையில் தொடங்க உள்ளது. அந்த நிகழ்ச்சி படம் பிடிக்கப்பட்டு 9 எபிசோட்களாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராவும் வழிகாட்டுனராகவும் லாரா தத்தா நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்த போட்டியில் நான், ப்ரியங்கா சோப்ரா, தியா மிர்சா வெற்றி பெற்றோம். அப்போதிருந்த வழிமுறைகள் வேறு, இப்போதுள்ள வழி முறைகள் வேறு. நான் இந்த போட்டிக்கு அழகிகளை தயார் செய்யும் பொறுப்பை ஏற்றிருக்கிறேன். மிஸ் யுனிவர்சாக விரும்பும் பெண்கள் இதற்கு முன் வெற்றி பெற்றவர்கள் என்ன செய்தார்கள் என்று பார்ப்பார்கள். நான் அவர்களுக்கு என்ன செய்தேன் என்பதை கற்றுக் கொடுக்க போகிறேன்.15 பேர் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களை மிஸ் யுனிவர்சுக்கு தயார்படுத்துவது என் வேலை. இறுதியாக தேர்ந்தெடுக்கப்படுறவருக்கும் மேலும் பயிற்சியும் வழிகாட்டுதலும் தர இருக்கிறேன். இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதால் மற்ற பெண்களும் அதன் மூலம் பாடம் படித்துக் கொள்ள முடியும் என்கிறார் லாராதத்தா.

கருத்துரையிடுக