பாலிவுட் பப்ளி பரினிதி சோப்ரா

பாலிவுட்டின் அழகான, துள்ளளான நடிகைகளில் ஒருவர் பரினிதி சோப்ரா. இதனால் இவரை பலரும் பப்ளி என்றே செல்லமாக கூப்பிட்டு வருகின்றனர்.
ஆனால் தன்னை அப்படி கூப்பிட வேண்டாம் என அனைவரிடமும் கூறி வருகிறாராம் பரினிதி சோப்ரா.பப்ளி என்று கூறுவது மரியாதை அற்ற வார்த்தை. மிகவும் மோசமானதாக நான் நினைக்கிறேன் என்று கூறும் பரினிதி, தான் இதுவரை 4 படங்களில் நடித்து விட்டதாகவும், அவற்றில் ஒரு படத்திற்கும் மற்றொரு படத்திற்கும் பெரிய அளவில் வேறுபாடு ஏதும் இல்லை எனவும் வருத்தப்பட்டுள்ளார். இதனால் தனது படங்களை திரும்பத் திரும்ப பார்ப்பவர்களுக்கு தம்மீதான எண்ணம் மாறுபட வாய்ப்பு உள்ளதால், பப்ளி என்று கூப்பிட்டு தன்னை அவமதிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறாராம்.பரினிதி தற்போது தனது புதிய படமான தாவீத் இ இசாக் படத்தின் ப்ரமோஷன் பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளாராம். ஆதித்யா ராய் கபூர் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை ஹபீப் பைசல் இயக்க உள்ளார். தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் தன்னை வேறுபடுத்தி காண்பிக்கும் பணிகளில் பரினிதி சோப்ரா தற்போது கவனம் செலுத்தி வருகிறாராம். மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது பற்றி எனக்கு கவலையில்லை. முதல் படத்தை விட இதில் சிறப்பாக காண்பிக்க வேண்டும் என்று தான் ஒவ்வொரு படத்தை முயற்சி எடுத்து செய்கிறேன். ஒவ்வொரு நடிகையிடமும் தனிப்பட்ட திறமை உள்ளது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு படமும் வித்தியாசமானது. இதனால் ஒருவருடன் ஒருவரை ஒப்பிடுவது தேவையற்றது என கண்டிப்புடன் சொல்கிறார் பரினிதி சோப்ரா.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget