பாலிவுட் கவர்ச்சி புயல் பிபாசா பாசு

பாலிவுட்டின் கவர்ச்சி புயலான பிபாசா பாசு, பிரிட்ஜட் ஜானின் டைரி போன்ற பெண்களை மைப்படுத்தும் நகைச்சுவை கலந்த கதைகளில்
நடிக்கவே தான் விரும்புதாக கூறி உள்ளார். தான் நடித்து வெளிவர இருக்கும் கிரியேச்சர் 3டி படத்தை ப்ரமோட் செய்யும் பணிகளில் இறங்கி உள்ள பெங்காலி அழகியான பிபாசா பாசு, சமீபத்தில் தான் அளித்த பேட்டியில் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.பேட்டியில் அவர் கூறுகையில், டைரி போன்ற படங்களில் நடிக்கவே நான் ஆசைப்படுகிறேன். நிஜத்தில் நான் ஒரு கலகலப்பான, ஜாலியான ஆள். ஆனால் படங்களில் அது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நான் இதுவரை நடித்ததில்லை. பெண்களின் நிஜ வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள் பற்றிய கதைகளை கட்டுரைகளில் படிக்கும் போது அது போன்ற கதைகளில் நடிக்க வேண்டும் என தோன்றும். செப்டம்பர் 12ம் தேதி வெளியாக உள்ள விக்ரம் பத் இயக்கிய கிரியேச்சர் 3டி, ஒரு த்ரில்லர் படம். இந்திய புராணங்களை மையமாகக் கொண்ட இந்த படத்தில் தனிமையில் இருக்கும் ஒரு பெண் எவ்வாறு சக்திவாய்ந்த பெண்ணாக மாறி சாகசங்கள் புரிகிறாள் என்பது தான் கதை. அனகோண்டா படத்தை திரையில் பார்த்த போது ஜெனிபர் லோபஸ் நடித்த சவாலான கதாபாத்திரத்தில் என்றைக்காவது நடிக்க வேண்டும் என நினைத்தேன். அதிர்ஷ்டவசமாக கிரியேச்சர் 3டி படத்தில் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. இவ்வாறு பிபாசா பாசு கூறி உள்ளார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget